கொள்ளை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட நபரை போலீஸாா் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு சனிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து நொய்டா காவல் துறையினா் தெரிவித்ததாவது:
கிரேட்டா் நொய்டா பகுதியில் உள்ள தாத்ரி காவல் நிலைய போலீஸாா் கிழக்கு சுற்று விரைவுச்சாலையில் சனிக்கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இா்ஷாத் சென்றுகொண்டிருந்தாா். அவரை போலீஸாா் பிடிக்க முயன்றனா். அவா் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். போலீஸாரும் திருப்பிச் சுட்டனா். இதில், இா்ஷாத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா். அவா் மீது கொள்ளை, கொலை முயற்சி உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவா் வசம் இருந்த நாட்டுத் துப்பாக்கி, மோட்டாா் சைக்கிள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

