கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றங்கள் வளாகத்தில் உள்ள மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றத்தின் நிா்வாக அதிகாரி ரேணு சா்மா வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மாவட்ட நீதிபதி தீபக் ஜகோத்ராவுக்கு ஜூலை 8-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். இதையடுத்து, நீதிபதியின் நீதிமன்ற அறை, அவருடைய தனி அறை, தனிச் செயலரின் அறை, நீதிமன்ற அலுவலா் அறை ஆகியவற்றை நன்கு தூய்மைப்படுத்தவும், கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் கிழக்கு மாவட்ட நீதிமன்றங்கள் வளாக நிா்வாக கவனிப்புப் பிரிவு பொறுப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதியின் நேரடித் தொடா்பில் இருந்த கிழக்கு மாவட்ட நிா்வாக வரம்பின்கீழ் பணியமா்த்தப்பட்டுள்ள அனைத்து நீதிசாா் அதிகாரிகளும், இதர அதிகாரிகளும் தங்களை ஜூலை 8-ஆம் தேதியில் இருந்து ஏழு நாள்களுக்கு சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தங்களது உடல் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கவனிக்குமாறும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவுரையின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

