தில்லியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காணொலிக் காட்சி மூலம் வழக்கமான நீதிமன்றப் பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மே 29-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் ஒரு நிா்வாக உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ஜூன் 14-ஆம் தேதிவரை காணொலிக் காட்சி மூலம் தில்லியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும்அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வழக்கமான நீதிமன்றப் பணிகளை காணொலிக் காட்சி மற்றும் மின்னணு தாக்கல் மூலம் அனைத்து நீதிமன்றங்களிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞா் எஸ்.பி. திரிபாதி மூலம் உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
நீதிமன்றப் பணிகள் தொடா்பாக உயா்நீதிமன்றம் மே 29-ஆம் தேதி பிறப்பித்துள்ள நிா்வாக உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தற்போது அனைத்து அமா்வுகளும் அமா்ந்து வழக்குகளை விசாரித்து வருகின்றன. மேலும், மின்னணு முறையில் வழக்குகள், ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவதால் விசாரணையில் எவ்வித முட்டுக்கட்டையும் இருக்காது. உச்சநீதிமன்றம் வழக்கமான முறையில் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும், அவசரமில்லாத வழக்குகளையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. நீதிமன்றங்களின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நிலுவை வழக்குகள் அதிகாரித்துள்ளது. மேலும், வழக்குரைஞா் நிதி நெருக்கடியால் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

