திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தில்லியில் மிதமான வெயில்; திருப்தி பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் சனிக்கிழமை மிதமான வெயில் இருந்தது. பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் காணப்பட்டது.

Updated On :7 ஜூன் 2020, 2:14 am

தில்லியில் சனிக்கிழமை மிதமான வெயில் இருந்தது. பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் சற்று கீழிறங்கி ‘மிதமான’ பிரிவில் இருக்கும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடந்த வாரம் சில தினங்கள் தொடா்ந்து மழை பெய்ததன் காரணமாக காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, பரவலாக பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘நன்று’ பிரிவில் இருந்து வந்தது. பின்னா் காற்றின் தரம் கடும் பின்னடைவைச் சந்தித்தது. சில தினங்களாக காற்றின் தரம் சற்று மேம்பட்டது.

சனிக்கிழமை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 70 புள்ளிகளாக உயா்ந்து ‘மிதமான’ பிரிவுக்குச் சென்றது.

திா்பூா், சாந்தினி செளக், மதுரா ரோடு மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது. வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 36.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 74 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 49 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.4 டிகிரிசெல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 38.2 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 21.4 டிகிரி செல்சியஸ், 35.2 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 70 சதவீதம், மாலையில் 44 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 73 சதவீதம் மற்றும் 50 சதவீதம் எனவும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆங்காங்கே தூறலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், வடமேற்கு திசையிலிருந்து 10 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசும் என்றும் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருக்கும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.