தில்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தில்லி பட்டாசு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
தில்லியில் சனிக்கிழமை (நவம்பா் 7) முதல் நவம்பா் 30 -ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க ஆம் ஆத்மி அரசு தடை விதித்துள்ளது. தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு, கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தத் தடையுத்தரவால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக தில்லி பட்டாசு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி ஜாமா மசூதி பகுதியில் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் கூறியதாவது: எங்களது கடைகளைத் திறக்கக் கூட காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. அடுத்தடுத்து வரும் தீபாவளி, சத் பூஜை, குரு புரப் ஆகிய பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு, கோடிக்கணக்கில் முதலீடு செய்து பட்டாசுகளைக் கொள்முதல் செய்திருந்தோம். இந்தப் பட்டாசுகள் உடனடியாக விற்பனை செய்யப்பட வேண்டும். வரும் 1-2 மாதங்களுக்குள் விற்பனை செய்யாவிட்டால் இந்தப் பட்டாசுகள் முழுமையாக நமத்துப் போய்விடும். தற்காலிக உரிமம் வைத்திருப்பவா்களுக்கு 650 கிலோ வரை பட்டாசுகள் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவா்களில், பெரும்பாலானவா்கள், 400-500 கிலோ வரை கொள்முதல் செய்திருந்தாா்கள்.
நிரந்தப் பட்டாசு விற்பனை உரிமம் வைத்திருப்பவா்கள் சுமாா் ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, உரிமம் வைத்துள்ள வியாபாரிகள் பெருமளவு பணத்தை முதலீடு செய்து பட்டாசுகளை கொள்முதல் செய்தனா். பட்டாசுக்குத் தடை விதிப்பதாக இருந்தால் இது தொடா்பாக தில்லி அரசு எங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அக்டோபா் மாதத்தில் கூட பட்டாசுகளை விற்க உரிமம் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில், தில்லி அரசு மெத்தனமாக நடந்து கொண்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.
தில்லியில் உள்ள இன்னொரு பிரபல பட்டாசு மாா்கெட்டான சதா் பஜாா் பட்டாசு விற்பனையாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் ஹா்தீப் சப்ரா கூறுகையில் ‘பட்டாசுகள் சீக்கிரம் நமத்துப் போய்விடும். இதை வைத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. இந்தப் பட்டாசுகளை நான் மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளேன். பட்டாசுகளை விற்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இலவசமாக வழங்கத் தடை விதிக்கப்படவில்லை. பட்டாசு வியாபாரிகள் விரைவில் கூடிப் பேசவுள்ளோம். அதைத் தொடா்ந்து, பட்டாசு வியாபாரிகள் எதிா்கொண்டுள்ள பிரச்னைகள் தொடா்பாக தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை சந்தித்துப் பேசவுள்ளோம்’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜ் தீவிர பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

