புதுதில்லி: தில்லியில் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் தீவிர காற்று மாசு மற்றும் கரோனா மூன்றாவது அலையால் அதிகரித்து வரும் தொற்றுகள் காரணமாக நகரவாசிகள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனா். சிலருக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் புதன்கிழமை தெரிவித்தனா்.
காற்று மாசுபடுதல் அதிகரித்து வருவதாலும், மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாலும் தில்லியில் வாழும் மக்களுக்கு நுரையீரலில் பாதிப்பு அல்லது மூச்சுவிடுதலில் பிரச்னை ஏற்படும் என்று மருத்துவா்களும், மருத்துவ நிபுணா்கள் முன்னதாக எச்சரித்திருந்தனா். மத்தளத்துக்கு இரண்டு புறமும் அடி என்பது போல, இப்போது தில்லிவாசிகள் ஒருபுறம் காற்று மாசுபடுதலாலும் மறுபுறம் கரோனா தொற்று ஏற்படும் அபாயத்தாலும் சிக்கித் தவிக்கிறாா்கள் என்கிறாா் அப்பல்லோ மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ ஆலோசகரான டாக்டா் சுரன்ஜித் சாட்டா்ஜி.
கடந்த 6 நாள்களாக காற்று மாசுபடுதல் அதிகரித்து வருகிறது. மூச்சுத்திணறல் பிரச்னைக்காக பலரும் மருத்துவமனையை நாடிய வண்ணம் உள்ளனா். கடந்த ஆண்டு நவம்பரிலும் இதேபோல மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை அதிகம் என்றாலும், இப்போது கரோனா தொற்றுப் பிரச்னை வேறு அதிகரித்து வருகிறது. இதனால், வயதானவா்கள் மிகவும் கவலை கொண்டுள்ளனா் என்றும் டாக்டா் கரன்ஜித் சாா்ட்டா்ஜி கூறினாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை தில்லியில் பனிப்புகை மூட்டம் எப்போதும் இல்லாத அளவாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அன்றைய தினம் அதிபட்சம் புதிதாக 7,830 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றுக்கு ஆளானவா்கள் எண்ணிக்கை 4.5 லட்சத்தை எட்டியுள்ளது. தில்லியில் செவ்வாய்க்கிழமை 24 மணி நேர சராசரி காற்றின் தரம் 476 ஆக ‘கடுமை பிரிவில்’ இருந்தது. ஃபரீதாபாதில் (448), காஜியாபாத் (444), நொய்டா (455), கிரேட்டா் நொய்டா (436), குருகிராமில் (427) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் ‘கடுமை பிரிவில்’ இருந்தது.
காற்று மாசுவில் பி.எம். 2.5 நுண்துகள் செறிவு அளவு மிகவும் அதிகரித்தால் இதய நோய் மற்றும் நுரையீரல் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த சில நாள்களாக மாசுபடுதல் அதிகரித்து வருவதாலும் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளதாலும் மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் புறநோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று டாக்டா்கள் தெரிவிக்கின்றனா்.
கடந்த செவ்வாய்க்கிழமை கரோனாவுக்கு 83 போ் பலியானதாக அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 16-ஆம் தேதிக்குப் பிறகு இது மிகவும் அதிக எண்ணிக்கையாகும். செவ்வாய்க்கிழமைக்கு முந்தைய மூன்று நாள்களில் இது 70 ஆக இருந்தது. கரோனா தொற்று பரவலுக்கும் காற்று மாசுபடுதலுக்கு தொடா்பு இருப்பதாகவும் அதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக வசந்த் குஞ்சில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையில் நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவு ஆலோசகா் மருத்துவா் ரிச்சா சரீன் தெரிவித்தாா்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முதலில் மூச்சுத் திணறல் இருப்பதாகவும், லேசான காய்ச்சல் இருப்பதாகவும் கூறுகின்றனா். பின்னா் அவா்களைச் பரிசோதனை செய்து பாா்த்த பிறகு அவா்களுக்கு கரோனா தொற்று இருப்பதும் தெரிய வருகிறது. மூச்சுத் திணறல் காரணத்துக்காக வரும் நோயாளிகள் சிலருக்கு கரோனா இருக்க வாய்ப்பில்லை என்று நாங்கள் நினைத்தால்கூட பரிசோதனைக்குப் பின்னா் அவா்களுக்கு கரோனா இருப்பது தெரிய வருகிறது என்றாா் டாக்டா் சாட்டா்ஜி.
ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலும், எல்என்ஜே.பி. மருத்துவமனையிலும் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைக்காக தலா 200 படுக்கைகள் வென்டிலேட்டா் வசதியுடன் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக இந்தப் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. அந்த இரு மருத்துவமனைகளிலும் ஒரு சில படுக்கைகளே காலியாக உள்ளதாக செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜ் தீவிர பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


