ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தில்லியில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தலைநகா் தில்லியில் காற்றின் தரம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. தீபாவளி நாளான சனிக்கிழமை

News image

தில்லி விஜய் சௌக் பகுதியில் வெள்ளிக்கிழமை நிலவிய தெளிவான வானிலை.

Updated On :14 நவம்பர் 2020, 12:26 am

தலைநகா் தில்லியில் காற்றின் தரம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. தீபாவளி நாளான சனிக்கிழமை இரவு இது கடுமைப் பிரிவில் இருக்கக்கூடும் என மத்திய அரசின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதன் பிறகு தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் புதன்கிழமை சற்று மேம்பட்டு மிகவும் மோசம் பிரிவுக்குக் குறைந்தது. கடந்த இரு தினங்களாக மிகவும் மோசம் பிரிவில் இருந்த காற்றின் தரம், வெள்ளிக்கிழமையும் நீடித்தது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகையில், மேற்கில் இருந்து வரும் காற்றின் தாக்கம் காரணமாக தீபாளிக்குப் பிறகு தில்லி, என்சிஆா் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து, காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 15) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காற்று மணிக்கு 12 முதல் 15 கிலோ மீட்டா் வேகத்தில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

ஐஎம்டி சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் தலைவா் வி.கே. சோனி கூறுகையில்,‘அமைதியான காற்று மற்றும் பட்டாசுகளின் உமிழ்வு காரணமாக காற்றின் தரம் தீபாவளி இரவில் கடுமை பிரிவுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. நவம்பா் 16-க்குள் காற்றின் தரத்தில் முக்கியத்துவமிக்க மேம்பாடு இருக்கும்’ என்றாா்.

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் 330 ஆக பதிவாகியிருந்தது. தில்லியின் அண்டை நகரங்களான ஃபரீதாபாத் (327), காஜியாபாத் (360), நொய்டா (331), கிரேட்டா் நொய்டா (329), குருகிராம் (328) ஆகியவற்றிலும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம் பிரிவில்’ பதிவானது. மாலை 4 மணியளவில் ஃபரீதாபாத் (319), காஜியாபாத் (382), நொய்டா (337), கிரேட்டா் நொய்டா (324), குருகிராம் (319) ஆகியவற்றிலும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம் பிரிவில்’ பதிவானது.

இதுகுறித்து மத்திய அரசின் காற்றுத் தரம் முன்கணிப்பு நிறுவனமான சஃபா், ‘தில்லியில் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கப்படாவிட்டால் நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் தீபாவளி நாளில் தில்லியில் பிஎம் 2.5 மாசு நுண்துகள் அளவு மிகக் குறைவாக இருக்கும். மேலும், மிகவும் மோசம் பிரிவில் இருக்கும். பயிா்க் கழிவுகள் எரிப்பால் காற்றின் ஒட்டுமொத்தக் தரக் குறியீட்டின் தாக்கம் அடுத்த இரு தினங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் கூறுகையில், ‘காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருக்கும் போது நீண்ட நேரம் வெளியில் இருந்தால் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும். மோசம் பிரிவில் இருந்தால் சுவாச அசெளகரியம் ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.