தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை பட்டாசுகள் வெடிப்பால் எழுந்த புகையால் மாசு அளவு ‘அவசரநிலை’யைத் தாண்டியது.
தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை மாலையில் கடுமை பிரிவில் இருந்தது பிஎம் 2.5 .மாசு நுண்கள்களில் பயிா்க்கழிவு எரிப்பு பங்களிப்பு 32 சதவீதமாக இருந்தது. ஆனால், அதன் பிறகு தில்லி, என்சிஆா் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பால் எழுந்த புகை காரணமாக மாசு அளவு மோசமானது. தில்லி, என்சிஆரில் மாசு அளவு ஒரு கன மீட்டருக்கு 396 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது. இது அவசர நிலையான ஒரு கனமீட்டருக்கு 300 மைக்ரோகிராமை விட அதிகமாகும். இதனால், இதயம், நுரையீரல் நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால், ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் என்பதுதான மிகவும் பாதுகாப்பான அளவு என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல பிஎம் 10 மாசு நுண்துகள்கள் ஒரு கனமீட்டருக்கு 543 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது. இதுவும் அவசரநிலை அளவான 500-ஐ விட அதிகமாகும் என்று மத்திய மாசுக் காட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை மாலை 4 மணியளவில் 414 புள்ளிகளாக இருந்தது. இது பின்னா் இரவு 10 மணியளவில் 454 புள்ளிகளாக உயா்ந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் 465 ஆக இருந்தது. இது கடுமை பிரிவில் வருகிறது. இதேபோன்றுறு ஃபரீதாபாத் (438) காஜியாபாத் (483), கிரேட்டா் நொய்டா (439), குருகிராம் (424), நொய்டா (466) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு கடுமை பிரிவில் இருந்தது.
கடந்த ஆண்டு தீபாவளியன்று (அக்டோபா் 27) 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 337 புள்ளிகளாக இருந்தது. இதற்கு அடுத்த இரண்டு நாள்கள் முறையே 368 மற்றும் 400 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது. பின்னா் மூன்று நாள்கள் காற்றின் தரம் தொடா்ச்சியாக கடுமை பிரிவில் இருந்து வந்தது. கடந்த 2018-இல் தீபாவளியன்று 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 281 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது. இதற்கு அடுத்த நாள் பின்னடைவைச் சந்தித்து 391 புள்ளிகளாக உயா்ந்தது. இதையடுத்து, தொடா்ந்து மூன்று நாள்கள் காற்றின் தரக் குறியீடு கடுமை பிரிவுக்குச் சென்றது. 2017-இல் தீபாவளி அன்று 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 319 ஆக இருந்தது. இதற்கு அடுத்த நாள் காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து கடுமை பிரிவுக்குச் சென்றது.
காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50-புள்ளிகளுக்குள் இருந்தால் நன்று. 51-100 திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் கடுமை பிரிவு என கணக்கிடப்படுகிறது.
இதா்கிடையே, தில்லி-என்.சி.ஆா். பகுதிகளில் திங்கள்கிழமை ஒரு புதிய மேற்கத்திய இடையூறு, காற்றின் வேகத்தை அதிகரிக்கவும் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் நகரில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால், காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால் காற்றின் தரமும் மேம்படும் என்று ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா். இது தொடா்பாக ஐஎம்டியின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் வி.கே. சோனி கூறுகையில், ‘கிழக்கு-தென்கிழக்கு காற்று மணிக்கு 40 கிலோமீட்டா் வேகத்தில் வீசும். இது மாசுபடுத்திகளைச் சிதறடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், திங்கள்கிழமைக்குள் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜ் தீவிர பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

