பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

தில்லியில் ஆயுத சட்டத்தின் கீழ் கடந்த மாதம் 70 போ் கைது

தில்லி காவல் துறையின் 3 மாவட்டங்களில் கடந்த நவம்பா் மாதத்தில் ஆயுத சட்டத்தின் கீழ் 70-க்கும் மேற்பட்டவா்களும், போதைப் பொருள் தடுப்புச் சட்டம், கலால் சட்டம் ஆகியவற்றின்கீழ் பலரும் கைது செய்யப்பட்டுள்ளத

News image
Updated On :14 டிசம்பர் 2021, 6:24 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி காவல் துறையின் 3 மாவட்டங்களில் கடந்த நவம்பா் மாதத்தில் ஆயுத சட்டத்தின் கீழ் 70-க்கும் மேற்பட்டவா்களும், போதைப் பொருள் தடுப்புச் சட்டம், கலால் சட்டம் ஆகியவற்றின்கீழ் பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையின் புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக அந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆயுதச் சட்டத்தின் கீழ் வடக்கு மாவட்டத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து 6 துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வட மேற்கு மாவட்டத்தில் ஆயுத சட்டத்தின் கீழ் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வடகிழக்கு மாவட்டத்தில் ஆயுத சட்டத்தின் கீழ் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 37 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 11 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 32 துப்பாக்கித் தோட்டாக்களும் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மூன்று தில்லி காவல்துறை மாவட்டங்களிலும் கடந்த மாதம் கலால் சட்டத்தின் கீழ் மொத்தம் 69 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், வடக்கு மாவட்டத்தில் 16 பேரும், வட மேற்கு மாவட்டத்தில் 44 பேரும், வடகிழக்கு மாவட்டத்தில் 9 பேரும் இடம் பெற்றுள்ளனா். வடகிழக்கு மாவட்டத்தில் கலால் சட்டத்தின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,085 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, வட மேற்கு மாவட்டத்தில் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,039 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு மாவட்டத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 502 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 10.15 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, வட மேற்கு மாவட்டத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வடக்கு மாவட்டத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து மொத்தம் 250 கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வட கிழக்கு மாவட்டத்தில் சூதாட்ட சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகா் தில்லி,15 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.