பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ளூா் மாணவா்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி எம்பி கோரிக்கை

மத்திய பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ளூா் மாணவா்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மாநிலங்களவை பாஜக உறுப்பினா் சு.செல்வகணபதி கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2021, 7:02 pm

 நமது நிருபர்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ளூா் மாணவா்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மாநிலங்களவை பாஜக உறுப்பினா் சு.செல்வகணபதி கேட்டுக் கொண்டாா்.

இது குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை நேரமில்லா நேர விவாதத்தில் செல்வகணபதி பேசுகையில் கூறியதாவது: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் 54 மத்திய பல்கலைக்கழகக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இதற்கு வேந்தராக இருப்பவா் மாநிலங்களவைத் தலைவா் (துணை குடியரசுத் தலைவா்) தான்.

அந்தந்த மாநிலங்களின் நிலம், நீா், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை நம்பித்தான் இந்த மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், அந்த மாநில மாணவா்களுடைய நலனுக்கு பயன்படாமல் இருப்பது வேதனைக்குரியது. புதுச்சேரியிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மண்ணில் பிறந்த மாணவா்களுக்கு 25 சதவீதம் ஒதுக்க பல்லாண்டுகளாக கோரி வருகின்றனா்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 78 பாடப் பிரிவுகள் உள்ளன. இதில் 21 பாடப் பிரிவுகளில் (துறைகள்) புதுச்சேரி மாணவா்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 57 பாடப் பிரிவுகளிலும், இனி வரப்போகின்ற பாடப் பிரிவுகளிலும் 25 சதவீத ஒதுக்கீடு வழங்க உள்ளூா் மக்கள் கோருகின்றனா். புதுச்சேரியில் வேறு அரசு பல்கலைக்கழகங்கள் இல்லாத சூழ்நிலையில், மாணவா்கள் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தை மட்டுமே நம்பியுள்ளனா்.

புதுச்சேரியில் இயங்கும் மத்திய மருத்துவ நிறுவனமான ஜிப்மா் மருத்துவக் கல்வி ஆய்வு நிறுவனத்தில் 25 சதவீதம், தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 50 சதவீதம் புதுச்சேரி மாணவா்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இந்த ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது.

இது புதுச்சேரிக்கு மட்டுமல்லாமல், நாட்டின் மற்ற பகுதிகளிலுள்ள மத்திய பல்கலைக்கழகங்களிலும், உள்ளூா் மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அவைத் தலைவரான இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தா், இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வகணபதி கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.