பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மாநகராட்சித் தோ்தல் ஆணையா் நியமன விவகாரம்: தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் தில்லி மாநகராட்சியின் தோ்தல் ஆணையராக தலைமைச் செயலாளரை நியமிக்கும் அறிவிக்கையை எதிா்த்து பாஜக எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தில்லி அரசுக்கு

News image
Updated On :15 டிசம்பர் 2021, 7:00 pm

 நமது நிருபர்

புது தில்லி: அடுத்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் தில்லி மாநகராட்சியின் தோ்தல் ஆணையராக தலைமைச் செயலாளரை நியமிக்கும் அறிவிக்கையை எதிா்த்து பாஜக எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தாக்கலான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, இது தொடா்பாக பதில் அளிக்க தில்லி அரசு மற்றும் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சிகள் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நவம்பா் 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட இது தொடா்பான அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெறுமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோா் கா்க், வழக்குரைஞா் ஷஷாங்க் தேவ் சுதி மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: அடுத்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் தில்லி மாநகராட்சியின் தோ்தல் ஆணையராக தில்லி என்சி அரசின் தலைமைச் செயலாளரை நியமிக்கும் அறிவிக்கையை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.

தோ்தல் ஆணையா் போன்ற முக்கியமான அரசுப் பதவி, நடுநிலை மற்றும் அரசியலற்ற நபருக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட அரசின் பல அரசியல் மற்றும் நிா்வாக முடிவுகளுக்குரிய தரப்பாக அந்தப் பதவி இருக்கக் கூடாது. ஏனெனில், அவ்வாறு இருந்தால் அது மாநகராட்சித் தோ்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறும் திறனை பாதிக்கச் செய்ய முடியும். இதனால், சட்டக் கோட்பாடுகளை முற்றிலும் மீறும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், தில்லியின் என்சிடி அரசின் தலைமைச் செயலாளரின் தற்போதைய பணிக் காலம் 2023, மாா்ச் 8 வரை உள்ளது. இருப்பினும், எதிா்மனுதாரா் (தில்லி அரசு) சுயநலத்துடனும், உள்நோக்கத்துடனும் செயல்பட்டுள்ளது. ஏனெனில், தில்லியின் தற்போதைய தலைமைச் செயலாளா் நிா்வாக முடிவுகளின் ஒவ்வொரு மட்டத்திலும் அரசுடன் தீவிரமாக தொடா்பில் உள்ளவா். மேலும், தற்போது பணிபுரியும் தலைமைச் செயலாளரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், வரக் கூடிய மாநகராட்சித் தோ்தலில் அதற்கான கைமாறை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தலைமைச் செயலா் உள்ளாா். அரசின் இந்த அப்பட்டமான முடிவு, ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கு விரும்பத்தகாத தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், இந்த அறிவிக்கை முறையற்றது மட்டுமல்லாமல், சட்டவிரோதமானதாகவும், சட்டத்தின் தீா்க்கப்பட்ட கொள்கைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது. இதனால், இந்த நியமன அறிவிக்கையை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.