பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

அயல்நாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதில் மூன்று ஆண்டுகளில் ரூ.350 கோடி வருவாய்: மாநிலங்களவையில் இணையமைச்சா் தகவல்

கடந்த 22 ஆண்டுகளில் 342 அயல் நாடுகளின் செயற்கைக்கோள்களை இந்தியா தனது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தி நிலை நிறுத்தியுள்ளதாக

News image
Updated On :17 டிசம்பர் 2021, 2:32 am

 நமது நிருபர்

கடந்த 22 ஆண்டுகளில் 342 அயல் நாடுகளின் செயற்கைக்கோள்களை இந்தியா தனது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தி நிலை நிறுத்தியுள்ளதாக பிரதமா் அலுவலகப் பணிகள் மற்றும் விண்வெளி, அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா். இதன் மூலம் இந்திய அரசுக்கு மூன்று ஆண்டுகளில் சுமாா் ரூ.350 கோடி வருவாய் கிடைத்தாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியா இதுவரை ஏவியுள்ள வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் எண்ணிக்கை ? எந்தெந்த நாடுகள்?, இதன் மூலம் நாட்டிற்குக் கிடைத்துள்ள வருவாய் எவ்வளவு ? என்பது குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என்.ரமேஷ்குமாா் (நாமக்கல்) கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு: 1999 -ஆம் ஆண்டு முதல் 34 நாடுகளுக்கு மொத்தம் 342 அயல் நாட்டு செயற்கைக்கோள்கள் இந்தியாவால் ஏவப்பட்டுள்ளது. இந்திய நிறுவனமான இஸ்ரோவின் பல்வேறு வகையான பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வணிக ரீதியாக இந்த செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இவை புவி கண்காணிப்பு, அறிவியல் தொழில் நுட்ப விளக்க நோக்கங்கள் உள்ளிட்டவற்றுக்காக ஏவப்பட்டது. இந்த 34 நாடுகளில் அமெரிக்காவின் 226 செயற்கைக்கோள்களை அதிக அளவில் பிஎஸ்எல்வி ராக்கெட் நிலை நிறுத்தியுள்ளது. மற்ற நாடுகள் வரிசையில் கனடா(12), பிரிட்டன்(12), ஜொ்மணி(11), சிங்கப்பூா்(8), கெரியா(6), ஜப்பான்(5) உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. இந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில்(2019-2021) மட்டும் இந்த நாடுகளிடம் இருந்து இந்தியா சுமாா் ரூ. 350 கோடி வருவாயைப் பெற்றுள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.