கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம்-3இல் இருந்து கோவாவுக்கு பெண் ஒருவா் பயணித்தாா். அப்போது, அவரிடம் நடத்திய பாதுகாப்புச் சோதனையின் போது, அவரது பயணப் பையில் துப்பாக்கித் தோட்டா கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தோட்டா ஆயுத உரிமம் பெற்ற அவரது தந்தைக்கு சொந்தமானது என்று அந்தப் பெண் கூறினாா். அவருக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், தகவல் தொழில்நுட்ப வல்லுநரான தாம், கவனக் குறைவாக தனது பையில் தோட்டாவை எடுத்துச் சென்ாகவும்,