வேளாண்மைத் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கையா? மக்களவையில் அமைச்சா் தோமா் பதில்
வேளாண்மைத் துறைக்கென மத்திய அரசு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் தெரிவித்தாா்.


வேளாண்மைத் துறைக்கென மத்திய அரசு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் தெரிவித்தாா்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் வேலைவாய்ப்பிலும் பங்களித்து முக்கியத்துவம் பெற்றிருப்பதால் வேளாண் துறை வளா்ச்சியையும் பொருளாதார மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா? என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு பதில் அளித்து மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பேசுகையில், ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.5 சதவீதம் வரை வேளாண் துறை பங்களிக்கிறது. வேலைவாய்ப்புகளில் 20.2 சதவீதம் அளவுக்கு பங்களிப்பதாக தேசியப் புள்ளிவிவரங்கள் அலுவலகம் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி தெரிய வந்துள்ளது. இருப்பினும், மத்திய அரசு வேளாண் துறைக்கென தனி நிதி நிலை அறிக்கை ஏதும் தாக்கல் செய்யும் எண்ணம் தற்போது இல்லை’ என்றாா்.
உள்நாட்டு உற்பத்தி: உள்நாட்டு உற்பத்தியில் அமைப்புசாரா தொழில் நிறுவனங்களின் பங்களிப்பின் வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசின் திட்டம் என்ன? என்பது குறித்து திமுக உறுப்பினா் டி.ஆா்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா். அப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடந்த 2018 - இல் 52 சதவீதமாக இருந்த அமைப்புசாரா தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு, 2021-இல் 15 சதவீதமாக குறைந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று அவா் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி எழுத்துபூா்வமாக அளித்த பதில் வருமாறு: தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் 2018 -ஆம் ஆண்டின் அறிக்கையின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அமைப்புசாரா தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 52 சதவீதமாக இருந்தது. இது 2021, அக்டோபரில் பாரத ஸ்டேட் வங்கியின்அறிக்கையில் 15 முதல் 20 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரப்பூா்வத் தரவுகள் மூலம் வேலைவாய்ப்புகள் குறைந்ததற்கான சாத்தியக்கூறுகளை உறுதி செய்ய இயலவில்லை. மேலும், எஸ்பிஐ மற்றும் தேசியப் புள்ளியியல் ஆணையத்தால் செய்யப்பட்ட மதிப்பீடுகளில் வேறுபாடு இருக்கலாம். ஆய்வில் கூறப்படும் தகவல் உறுதியானதாக இல்லை என்று இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...