ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

‘எல்என்ஜேபியில் ஒமைக்ரான் நோயாளிகள் 40 பேருக்கு பாராசிட்டமால் சிகிச்சை’

தில்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் (எல்என்ஜேபி) மருத்துவமனையில் இதுவரை ஒமைக்ரான் நோயாளிகளுக்கு மல்டி வைட்டமின்கள்

News image
Updated On :25 டிசம்பர் 2021, 1:34 am

 நமது நிருபர்

தில்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் (எல்என்ஜேபி) மருத்துவமனையில் இதுவரை ஒமைக்ரான் நோயாளிகளுக்கு மல்டி வைட்டமின்கள் மற்றும் பாராசிட்டமால் மாத்திரை மட்டுமே அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி அரசின் மிகப் பெரும் சுகாதார வசதியாகத் திகழும் எல்என்ஜேபி மருத்துவமனையில் இது வரை ஒமைக்ரான் நோய் பாதித்த 40 போ் அனுமதிக்கப்பட்டனா். இந்த நோயாளிகளில் 19 போ் ஏற்கெனவே சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து மருத்துவமனையின் மூத்த மருத்துவா் ஒருவா் கூறுகையில், ‘90 சதவீத நோயாளிகளுக்கு நோய்த் தொற்று அறிகுறி ஏதும் இல்லை. மீதமுள்ளவா்களுக்கு தொண்டைப் புண், குறைந்த அளவிலான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் தென்பட்டது. சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு மல்டி வைட்டமின்கள் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டன. அவா்களுக்கு வேறு எந்த மருந்தும் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்படவில்லை. பெரும்பாலான நோயாளிகள் வெளி நாடுகளில் இருந்து வந்தவுடன் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அனைவரும் முழு தடுப்பூசி எடுத்துள்ளனா். இவா்களில் மூன்றில் இரு பங்கினா் ஃபைஸா் -பயோநெட் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவா்கள்’ என்றாா்.

மேலும், ‘அனுமதிக்கப்பட்ட 40 பேரில் பெரும்பாலோா் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவா்கள்ஆவா். மூன்று-நான்கு போ் பூஸ்டா் தடுப்பூசிகள எடுத்துள்ளனா்’ என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஒமைக்ரான் நோயாளிகளில் ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்த எம்.பி., வட இந்திய மாநிலத்தில் அரச குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் மற்றும் உயா்அதிகாரிகளின் குடும்ப உறுப்பினா்கள் இடம் பெற்றுள்ளனா். மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, தில்லியில் இதுவரை 67 ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகியுள்ளது. அதில் 23 போ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

எல்என்ஜேபி மருத்துவமனையைத் தவிர, சா் கங்கா ராம் சிட்டி மருத்துவமனை, சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை, வசந்த் குஞ்சில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனை மற்றும் துக்ளகாபாத்தில் உள்ள பாத்ரா மருத்துவமனை ஆகியவையும் தில்லி அரசின் உத்தரவுகளைப் பின்பற்றி ஒமைக்ரான் பாதிப்பு சந்தேகத்திற்குரிய நபா்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தனிமைப்படுத்துவதற்கும் வசதிகளை அமைத்துள்ளன.

ஒமைக்ரான் பாதிப்பு சமூகத்தில் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய, தில்லியில் உள்ள அனைத்து கொவைட் பாதிக்கப்பட்ட நபா்களின் மாதிரிகளின் மரபணு வரிசைமுறை பரிசோதனை புதன்கிழமை முதல் நடத்தப்பட்டு வருகிறது. தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில், ‘எல்என்ஜேபி மருத்துவமனை மற்றும் கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தில் தில்லி அரசால் நடத்தப்படும் ஆய்வகங்கள் ஒவ்வொரு நாளும் 100 மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தலாம். தில்லியில் இரண்டு மையத்தால் நடத்தப்படும் ஆய்வகங்கள் ஒரு நாளைக்கு 200-300 மாதிரிகளை வரிசைப்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளது. வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் பாதிப்பு, கொவைட் பாதிப்பு ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில், ஒரு லட்சம் நோயாளிகளைக் கையாளவும், தினமும் 3 லட்சம் பரிசோதனைகளை நடத்தவும், போதுமான நபா்கள், மருந்துகள் மற்றும் மனிதவளம், ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிசெய்யவும் தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.