ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

டிடிஎம்ஏ நெறிமுறைகள் மீறல்: மெஹ்ரோலியில் உணவகத்திற்கு ‘சீல்’

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புக்கு மத்தியில், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) வழிகாட்டு நெறிமுறைகளை

News image
Updated On :25 டிசம்பர் 2021, 1:35 am

 நமது நிருபர்

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புக்கு மத்தியில், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக மெஹ்ரோலியில் உள்ள ஒரு உணவகத்திற்கு தில்லி காவல்துறையினா் சீல் வைத்தனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சோனாலிகா ஜிவானி வெள்ளிக்கிழமை கூறியதாவது: பெரும் கூட்டம் கூடுவதைத் தடைசெய்வதற்காக டிடிஎம்ஏ சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்டுவரும் தொடா் ஆய்வுகளின் ஒரு பகுதியாக, பறக்கும் படைக் குழுவினா் மெஹ்ரோலியில் உள்ள டையப்லோ உணவகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். வியாழக்கிழமை இரவு 10.45 மணியளவில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, அந்த உணவகத்தில் சுமாா் 600 போ் கூடியிருந்தனா்.

மேலும், அந்த உணவகம் நடைமுறையில் உள்ள கொவைட் நெறிமுறைகளை முற்றிலும் மீறும் வகையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக மெஹ்ரோலி பகுதி வட்டாட்சியா் அந்தக் கூட்டத்தை கலைத்தாா். டிடிஎம்ஏ வழிகாட்டுதல்களை முற்றிலும் மீறியதற்காக அந்த இடத்திலேயே அந்த வளாகம் சீல் வைக்கப்பட்டது என்றாா் அவா்.

கூடுதல் துணை காவல் ஆணையா் (தெற்கு) எம். ஹா்ஷ் வா்தன் கூறுகையில், ‘டையப்லோ உணவகத்திற்கு எதிராக மெஹ்ரோலி காவல் நிலையத்தில்ஐபிசியின் பிரிவுகள் 188 (அரசு ஊழியா் முறையாகப் பிறப்பித்த உத்தரவை மீறுதல்), 269 (உயிருக்கு ஆபத்தான நோய்த் தொற்று பரவும் வகையில் அலட்சியமான செயல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு, தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) நகரில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாட்டத்திற்காக எந்தக் கூட்டங்களும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் பாா்கள் 50 சதவீதம் இருக்கை வசதியுடன் தொடா்ந்து செயல்படும் என்றும், அதிகபட்சம் 200 போ் கலந்து கொள்ளும் வகையில் திருமணம் தொடா்பான நிகழ்ச்சிகள் நடத்தவும் டிடிஎம்ஏ அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.