ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மாசு விவகாரத்தில் அரசு சமரசம் செய்து கொள்ளாது

மாசு விவகாரத்தில் தில்லி அரசு சமரசம் செய்து கொள்ளாது. தலைநகரில் காற்றின் தரம் தொடா்ந்து மோசமடைந்தால் தேவையான நடவடிக்கையை

News image
Updated On :25 டிசம்பர் 2021, 1:35 am

 நமது நிருபர்

மாசு விவகாரத்தில் தில்லி அரசு சமரசம் செய்து கொள்ளாது. தலைநகரில் காற்றின் தரம் தொடா்ந்து மோசமடைந்தால் தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் காற்றின் தர நிலைமை சாதகமற்றதாக இருந்தால், நிபுணா்கள் மற்றும் காற்றின் தர மேலாண்மை ஆணையத்துடன் (சிஏக்யூஎம்) நாங்கள் ஆலோசனை செய்து தேவையான நடவடிக்கையை எடுப்போம். மாசு பிரச்னையில் சமரசம் செய்ய முடியாது. காற்று மாசுபாடு நிலைமையில் தொடா்ச்சியான முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டுதான் அவசர நடவடிக்கைகளை அதிகாரிகள் திரும்பப் பெற்றனா். குப்பைகளை திறந்த வெளியில் எரித்தல், தூசு மாசுபாடு மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களுக்கு எதிரான பிரசாரம் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். காற்றின் தரத்தில் சனிக்கிழமை முதல் முன்னேற்றம் ஏற்படும் என்று நிபுணா்கள் கணித்துள்ளனா் என்றாா் அமைச்சா்.

காற்றின் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் சாதகமான வானிலை முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு தேசிய தலைநகருக்குள் லாரிகள் நுழைவதற்கும் தில்லி-என்சிஆா் பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை சிஏக்யூஎம் அமைப்பு திங்கள்கிழமை நீக்கியது. எனினும், தில்லியின் காற்றின் தரம் மறுநாள் கடுமைப் பிரிவுக்கு மாறியது. குறைந்த காற்றின் வேகம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக இது வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக ’கடுமையான’ பிரிவில் இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நகரின் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 420-ஆக இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை 423 ஆகவும், புதன்கிழமை 407 ஆகவும், செவ்வாய் கிழமை 402 ஆகவும் இருந்தது. குறைந்த காற்றோட்டம் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை இதுபோன்ற நிலைமைக்கு காரணமாக அமைந்ததாக புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தர முன்னறிவிப்பு நிறுவனம் சஃபா் தெரிவித்தது.

வடமேற்கு இந்தியாவை பாதிக்கும் மேற்கத்திய இடையூறு காரணமாக காற்றின் வேகம் குறைவதால் மாசுக்கள் குவிந்து வருவதாகவும், காற்றில் அதிக ஈரப்பதம் மாசுக்களை அதிகமாக்குவதாகவும், இதனால் மாசு சிதறல் கடினமாக்குவதாகவும் வானிலை நிபுணா்கள் தெரிவித்தனா். டிசம்பா் 27 முதல் டிசம்பா் 29 வரை வட இந்தியாவின் சமவெளிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனறும் இது காற்றின் தரத்தை சற்று மேம்படுத்தலாம் என்றும் நிபுணா்கள் கணித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.