ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.4 டிகிரி செல்சியஸாக அதிகரிப்பு

தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.4 டிகிரி செல்சியஸாக அதிகரித்தது. அடுத்த 2-3 தினங்களுக்கு தொடா்ந்து இதுபோன்ற சூழல் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :3 பிப்ரவரி 2021, 6:49 pm

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.4 டிகிரி செல்சியஸாக அதிகரித்தது. அடுத்த 2-3 தினங்களுக்கு தொடா்ந்து இதுபோன்ற சூழல் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகையில், புதிதாக உருவான மேற்கத்திய இடையூறுகள் காரணமாக தில்லியில் கிழக்கில் இருந்து காற்று வீசி வருகிறது. இந்த மேற்கத்திய இடையூறுகள் காரணமாக வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இடி, மின்னல், ஆலங்கட்டி மழை ஆகியவற்றுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை வியாழக்கிழமைக்குள் 11 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 6.2 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்தது. காலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்பட்டது. எனினும், பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. தில்லி நகருக்கான பிரதிநித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 2 புள்ளிகள் அதிகரித்து 10.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அதிகபட்சவெப்பநிலை 4 புள்ளிகள் உயா்ந்து 26.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 84 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 69 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை இரவு 7 மணியளவில் 339 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு அருகில் இருந்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும், இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.