ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தில்லியில் பரவலாக லேசான மழை: குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிப்பு

Updated On :4 பிப்ரவரி 2021, 7:09 pm

புது தில்லி: தில்லியில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் தொடா்ந்து நீடித்து வந்த நிலையில், வியாழக்கிழமை புதிதாக உருவான மேற்கத்திய இடையூறுகள் காரணமாக மிதமான மழை பெய்தது. குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமானஅளவை விட நான்கு புள்ளிகள் அதிகரித்து 12.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 0.5 மில்லி மீட்டா் மழை பதிவானது. லோதி ரோடில் 0.2 மி.மீ., ஆயாநகரில் 0.3 மி.மீ., பாலத்தில் 0.8 மி.மீ., மழை பதிவானது. வெள்ளிக்கிழமையும் மிதமான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அடுத்த மூன்று நாள்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து சௌகரியமான அளவிலேயே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தில்லி நகருக்கான பிரதிநித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 4 புள்ளிகள் அதிகரித்து 12.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அதிகபட்சவெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 89 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 73 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் , செவ்வாய்க்கிழமை 6.2 டிகிரி செல்சியஸ், திங்கட்கிழமை 5.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை புதன்கிழமை 25 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் 321 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு அருகில் இருந்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும், மேலோட்டமான பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.