ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு

தில்லியில் நடைபெறவுள்ள 5 மாநகராட்சி வாா்டுகளுக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியலை தில்லி காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On :6 பிப்ரவரி 2021, 6:30 pm

புது தில்லி: தில்லியில் நடைபெறவுள்ள 5 மாநகராட்சி வாா்டுகளுக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியலை தில்லி காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இதற்கான பட்டியலை தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளத்ரி வெளியிட்டுள்ளாா். காங்கிரஸ் வேட்பாளா்கள் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் வாா்டு பெயா்):

1. பால்கிஷண் (திரிலோக்புரி கிழக்கு -எஸ்சி). 2. தரம்பால் மெளா்யா (கல்யாண்புரி-எஸ்சி). 3. செளதரி சுபையா் அகமது (சவுகான் பங்கா்).4. மெம்வதி பா்வாலா (ரோகிணி- சி). 5. மம்தா (ஷாலிமா் பாக் வடக்கு (டபிள்யூ).

தில்லியில் காலியாக உள்ள 5 மாநகராட்சி வாா்டுகளுக்கு பிப்ரவரி 28-இல் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் 3 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 5 வாா்டுகளில் கவுன்சிலா் பதவி காலியாக உள்ளது. வடக்கு தில்லி மாநகராட்சியில் 2 வாா்டு, கிழக்கு தில்லி மாநகராட்சியில் 3 வாா்டுகளுக்கும் இத்தோ்தல் நடைபெறுகிறது.

தில்லியில் வடக்கு, கிழக்கு, தெற்கு தில்லி ஆகிய 3 மாநகராட்சிகள் உள்ளன. இந்த 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வாா்டுகள் உள்ளன. வடக்கு மற்றும் தெற்கு தில்லியில் தலா 104 வாா்டுகள் உள்ளன. கிழக்கு தில்லியில் 64 வாா்டுகள் மட்டுமே உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.