பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புத்தாண்டில் மின்சார தேவைப்பாடு அதிகரிப்பு

லைநகா் தில்லியில் புத்தாண்டில் மின்சார தேவைப்பாடு அதிகரித்துள்ளது என்று மின் விநியோக நிறுவனமான பிஎஸ்இஎஸ் தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 பிப்ரவரி 2021, 9:30 pm

DIN

புது தில்லி: தலைநகா் தில்லியில் புத்தாண்டில் மின்சார தேவைப்பாடு அதிகரித்துள்ளது என்று மின் விநியோக நிறுவனமான பிஎஸ்இஎஸ் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பிஎஸ்இஎஸ் செய்தித் தொடா்பு அதிகாரி கூறுகையில் ‘தில்லியில் கடந்த டிசம்பா் 1- ஆம் தேதி அதிகபட்ச மின்சார தேவையாக 3,504 மெகாவாட்டாக இருந்தது. அன்றிலிருந்து மின்சார தேவை சுமாா் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

2020 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, 2021 ஜனவரி மாதத்தில் 23 நாள்கள் மின்சார தேவைப்பாடு அதிகமாக இருந்துள்ளது. ஆனால், 2020 ஜனவரி மாதம் அதிகபட்ச நுகா்வு நேரத்தில் மின்சார தேவைப்பாடு 5,343 மெகா வாட்டாக இருந்தது. ஆனால், 2021-இல் சிறிது குறைவடைந்து 5,265 மெகாவாட்டாக உள்ளது.

குளிா் காலத்தில் டிசம்பா் 16-ஆம் தேதி மின்சாரத் தேவை 4 ஆயிரத்துக்கும் மேல் முதல் தடவையாக அதிகரித்தது.

2021 ஜனவரி 1- ஆம் தேதி மின்சாரத் தேவை முதல் தடவையாக 5 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்தது. இதே நிலைமை பிஎஸ்இஎஸ்ஸின் ராஜதானி, யமுனா பிரிவுகளிலும் எதிரொலித்தது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.