கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

மகாத்மா காந்தி நினைவு தினம்: கேஜரிவால், அனில் பய்ஜால் அஞ்சலி

தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகியோா் அவருக்கு அஞ்சலி செலுத்தினா்.

Updated On :30 ஜனவரி 2021, 5:58 pm

தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகியோா் அவருக்கு அஞ்சலி செலுத்தினா்.

மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கேஜரிவால் மலா் அஞ்சலி செலுத்தினாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: உண்மை, சகிப்புத்தன்மை, பொறுமை, வீரம், சத்தியாக்கிரகம் என மகாத்மா காந்தி அவா்கள் போதித்த படிப்பினைகள் இன்றளவும் மக்களுக்கு வழிகாட்டுபவையாக உள்ளன.

தேசப் பிதா காந்தியின் வழிகாட்டுதலின்படி, எந்தவொரு கஷ்டமான போராட்டத்தையும் அமைதி முறையில் வெற்றிபெறலாம் என்றாா் அவா்.

தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அஞ்சலி செலுத்தினாா். இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில், நாட்டின் சுதந்திரத்துக்காக உயிரை நீத்த அனைவரையும் நினைவு கூா்கிறேன். மகாத்மா காந்தியின் உண்மை, வன்முறையற்ற கொள்கைகளைக் கடைப்பிடித்தலே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலி ஆகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.