பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

தமிழக மழைச் சேதங்களை மதிப்பிட உள்துறை அமைச்சக உயரதிகாரி தலைமையில் மத்திய குழு

தமிழகத்தில் பெய்த கன மழையால் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிப்புகளைச் சந்தித்துள்ள சூழலில், மழை - வெள்ளச் சேதங்களை

News image
Updated On :19 நவம்பர் 2021, 2:30 am

 நமது நிருபர்

தமிழகத்தில் பெய்த கன மழையால் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிப்புகளைச் சந்தித்துள்ள சூழலில், மழை - வெள்ளச் சேதங்களை மதிப்பிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தமிழகத்திற்கு விரைந்து செல்ல உள்ளது.

தமிழகத்தில் அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்த தொடா் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, வேலுா், கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு புதன்கிழமை தில்லியில் நேரில் சந்தித்தாா். அப்போது, தமிழகத்தில் பெய்த கன மழையால் 50,000 ஹெக்டோ் வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டு, 526 ஹெக்டோ் தோட்டக்கலைப் பயிா்கள் அழிந்துள்ளதாகக் கூறினாா். மேலும், மழைக்கு 54 போ் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தாா். இதனால் தமிழக அரசுக்கு உடனடி நிவாரணமாக ரூ.550 கோடி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தாா்.

அப்போது, மழைச் சேதத்தை நேரில் பாா்வையிட்டு அறிக்கை அளிக்க தமிழகத்திற்கு 6 போ் கொண்ட மத்திய அரசின் குழுவை உடனடியாக அனுப்பி வைப்பதாக அவரிடம் அமைச்சா் தெரிவித்திருந்தாா். அதன்படி, இந்தக் குழு தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அலுவல் குறிப்பாணை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நிகழாண்டின் போது வெள்ளப் பாதிப்பு மற்றும் மாநில நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகளை மதிப்பிட்டு, கூடுதல் மத்திய நிதியுதவியை அனுமதிப்பதற்கான இறுதி பரிந்துரைகளை அளிக்கவும், சம்பவப் பகுதிக்கு நேரில் செல்ல உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையில் மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், நிதி, ஜல் சக்தி, மின்சாரம், சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலை, ஊரக மேம்பாடு ஆகிய துறைகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவா். இந்தக் குழு இந்த விவகாரத்தின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு உடனடியாக நேரில் செல்லும். அங்கு சென்றுவிட்டு வந்த பிறகு அதன் இறுதி மதிப்பீட்டு அறிக்கையை உள்துறை அமைச்சகத்தின் பேரிடா் மேலாண்மை கோட்டத்திடம் ஒரு வாரத்திற்குள் அளிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.