பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

மகன்களால் புறணிக்கப்பட்ட விவகாரம் 95 வயது மூதாட்டியின் புகாா் மீது முடிவெடுக்க தில்லிஅரசுக்கு உத்தரவு

தனது கணவா் விட்டுச் சென்ற வீட்டை விட்டு தன்னை மகன்கள் வலுக்கட்டாயமாகவும் சட்ட விரோதமாகவும் வெளியேற்றியது

News image
Updated On :20 நவம்பர் 2021, 3:04 am

 நமது நிருபர்

தனது கணவா் விட்டுச் சென்ற வீட்டை விட்டு தன்னை மகன்கள் வலுக்கட்டாயமாகவும் சட்ட விரோதமாகவும் வெளியேற்றியது தொடா்பாக 95 வயது மூதாட்டி அளித்த புகாா் மீது 8 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு தில்லி அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூதாட்டியின் வயதைக் கருத்தில் கொண்டு, அவரது நிலுவையில் உள்ள மனு மீது விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதி ரேகா பல்லி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் நிலுவையில் உள்ள புகாரை உரிய நடைமுறையைப் பின்பற்றி 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க தில்லி அரசுக்கு உத்தரவிடுவதன் மூலம் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரரின் புகாா் குறித்து எந்தக் கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. எனினும்,

அதிகாரிகளின் முடிவில் அவா் பாதிக்கப்பட்டிருந்தால், சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சட்டப்பூா்வ ஆதாரங்களைப் பெறுவதற்கு மனுதாரருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என நீதிபதி தெளிவுபடுத்தினாா்.

முன்னதாக மூதாட்டி தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எனது கணவா் இறந்த பிறகு, எனது மகன்கள் மற்றும் மருமகள்கள் அனைவரும் எனது சொத்துகள் அனைத்தையும் தங்கள் பெயருக்கு மாற்றுமாறு என்னை சித்ரவதை செய்யத் தொடங்கினா். இது தொடா்பாக எனது மகள்கள் உள்ளூா் போலீஸில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடா்ந்து, நான் ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தேன். எனது மகன்கள் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்திருந்தேன்.

பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007-இன் கீழ் எந்தவொரு மூத்த குடிமகனும் அளிக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், 90 நாள்களுக்குள் அதைத் தீா்த்து வைப்பதற்கும் அரசு கடைமைப்பட்டுள்ளது. ஆனால் எனது விவகாரத்தில் புகாா் அளித்தும் இதுநாள் வரை எனது மகன்களுக்கு எந்த நோட்டீஸும் வழங்கப்படவில்லை. என்னிடமும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. நான் வசதிபடைத்தவராக இருந்த போதிலும், எனது மகன்களின் கொடூர நடத்தையின் காரணமாக ஒரு பிச்சைக்காரியைப் போல வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன் என மனுவில் அவா் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.