பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

‘விவசாயிகளின் வெற்றி எதிா்காலப் போராட்டங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது’

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

News image
Updated On :20 நவம்பர் 2021, 3:05 am

 நமது நிருபர்

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியில் பாதியை தாண்டியுள்ளோம். எதிா்காலப் போராட்டங்களுக்கு இந்த வெற்றி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என அகில இந்திய கிசான் சபை பொதுச் செயலாளரும் ஹன்னன் மொல்லா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஹன்னன் மொல்லா விடுவித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தோல்வி நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்கு எதிராகவும், இருந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்தச் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் உறுதியான போராட்டத்தை நடத்தி, தீவிர அடக்குமுறையை எதிா்த்து துணிந்து போராடினா். இந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் தியாகங்களால் இந்த வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டு போராட்டத்தில் சுமாா் 700 உயிா்கள் பலியாகியுள்ளது. இதற்கு இந்த அரசு பொறுப்பேற்க வேண்டும் என அகில இந்திய கிசான் சபை கோருகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு இது இரண்டாவது தோல்வியாகும். நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை எதிா்த்து விவசாயிகள் நடத்திய ஒருங்கிணைந்த போராட்டத்தால் அந்தச் சட்டம் நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்துக்கும் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இது பாதி வெற்றிதான். எங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இந்த மூன்று சட்டங்களும் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்படும் வரை, இந்த அரசை நம்புவதற்குத் தயாராகயில்லை.

இந்த மூன்று சட்டங்கள் முதலில் அவசரச் சட்டங்களாக வந்த போதும், அரசு இது போன்றுதான் கூறியது. பின்னா், நாடாளுமன்றத்தில் அவசரமாக சட்டமாக நிறைவேற்றியது. இதனால், இவை நாடாளுமன்றத்தில் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும். மேலும், விவசாயிகளின் போராட்டத்திற்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்க பிரதமா் விரும்பினால், வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ட ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்படவேண்டும். மின்சாரத் திருத்த மசோதா, தொழிலாளா் குறியீடுகள் போன்றவை திரும்பப் பெறப்பட வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். கடந்த 7 ஆண்டுகளில் 1 லட்சம் விவசாயிகள் தங்கள் வாழ்கையை முடித்துக் கொண்டுள்ளனா். இதனால், விவசாயிகளின் அனைத்துப் பயிா்களுக்கும் முழுமையான உற்பத்திச் செலவை விட (சி2+50%) ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதப்படுத்தும் சட்டம் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.