கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து தரவுகளை அட்டவணைப்படுத்தும் ஒருங்கிணைப்பு ஏஜென்சியாக உள்ள தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: நவம்பா் 15-ஆம் தேதி வரை தில்லியில் மொத்தம் 5,277 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. இது 2015 -ஆம் ஆண்டிலிருந்து ஒரு வருடத்தில் தேசியத் தலைநகரில் பதிவான அதிகபட்ச அளவாகும். கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 1,850 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். எனினும், டெங்கு காரணமாக புதிதாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்தப் பருவத்தில் நவம்பா் 20 வரை மொத்தம் 7,128 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளில், மொத்த டெங்கு பாதிப்புகள் முறையே 4,431 (2016), 4,726 (2017), 2,798 (2018), 2,036 (2019) மற்றும் 1,072 (2020) என பதிவாகி இருந்தது.