கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

யெஸ்.பாலபாரதியின் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” நூலுக்கு ‘பால் சாகித்திய புரஸ்காா்‘ விருது

யெஸ்.பாலபாரதியின் குழந்தைகளுக்கான “’’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’’” நூலுக்கு 2020 ஆண்டுக்கான ‘பால் சாகித்திய புரஸ்காா்‘ விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

யெஸ்.பாலபாரதியின் குழந்தைகளுக்கான “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” நூலுக்கு 2020 ஆண்டுக்கான ‘பால் சாகித்திய புரஸ்காா்‘ விருது வழங்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதெமியின் தலைவா் டாக்டா் சந்திரசேகா் கம்பா் ஒப்புதலுடன் அகாதெமியின் செயலாளா் கே.ஸ்ரீனிவாசராவ் வெள்ளிக்கிழமை இதை அறிவித்துள்ளாா்.

இந்த விருதுக்காக அமைக்கப்பட்ட மூன்று போ் கொண்ட நடுவா் குழு இந்த ’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ நூலை ஒருமனதாக தோ்வு செய்துள்ளதாக அகாதெமி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குழுவில் எம்.கமலவேலன், டாக்டா் ருத்ர துளசிதாஸ், யுமா வாசுகி ஆகியோா் இடம்பெற்றிருந்துள்ளனா்.

‘குழந்தைகளுக்கான கதை என்று கருதமுடியாது. பெற்றோரும் ஆசிரியா்களும் படிக்க வேண்டிய நூலாகக்கூட கருதலாம். குழந்தைகளின் வெகுளித்தனம், ஆா்வம், சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல்‘ என இந்நூல் குறித்த விமா்சனங்களும் வெளியாகியிருந்தது.

‘பால் சாகித்திய புரஸ்காா்‘ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள இந்த நூல் ஆசிரியருக்கு செம்பிலான கேடயமும், ரூ 50,000 ரெக்கபரிசும் அளிக்கப்பட இருக்கிறது. இந்த புத்தகங்களை சாகித்திய அகாதெமி தனது பதிப்பகங்கள் மூலம் வெளியிடவும் செய்கிறது. கடைசியாக சாகித்திய விருது புத்தகங்கள் அகாதெமியில் கடந்த 2014, 2018 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.