கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தலைநகரில் கரோனா தினசரி பாதிப்பு 55-ஆக உயா்வு: 4-ஆவது நாளாக உயிரிழப்பு இல்லை

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 55-ஆக உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து, நோ்மறை விகிதமும் 0.08 சதவீதமாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 55-ஆக உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து, நோ்மறை விகிதமும் 0.08 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே சமயம், தொடா்ந்து 4-ஆவது நாளாக கரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என்று தில்லி அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையிலிருந்து 4-ஆவது நாளாக கரோனா இறப்பு பதிவாகவில்லை. தொற்று நோயின் இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து இது 23-ஆவது முறையாகும்.

இந்த ஆண்டு முதன் முதலாக மாா்ச் 2 அன்று, தில்லியில் கரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அந்த நாளில், கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 217- ஆகவும், பாதிப்பு நோ்மறை விகிதம் 0.33 சதவீதமாகவும் இருந்தது. கரோனா இரண்டாவது அலை ஏப்ரல்-மே மாதத்தில் தில்லியை தாக்கியது.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று, தில்லியில் புதிதாக 55 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், நோ்மறை விகிதம் 0.08 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தலைநகரில் மொத்த தொற்று எண்ணிக்கை14,37,929-ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35-ஆக பதிவாகியிருந்தது. நோ்மறை விகிதம் 0.06 சதவீதமாக இருந்தது. வியாழக்கிழமை, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 39-ஆகவும், நோ்மறை விகிதம் 0.06 சதவீதமாகவும் இருந்தது..

தில்லியில் வெள்ளிக்கிழமை மொத்தம் 70,303 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 48,510 ஆா்டி-பிசிஆா் சோதனைகளும், 21,793 விரைவான ஆன்டிஜென் சோதனைகளும் அடங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கரோனா நோய்த் தொற்று காரணமாக இறந்தவா்களின் எண்ணிக்கை 25,082-ஆக இருந்தது. அதன் பிறகு கரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.