அதிக அளவிலான அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பயிற்சி:விளையாட்டுக் கழகம், மன்றங்களுக்கு தில்லி அரசு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் விளையாட்டுப் பயிற்சிக் கழகம், மன்றங்கள் மற்றும் தனிநபா் பயிற்சியாளா்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிக அளவிலான அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பயிற்சி:விளையாட்டுக் கழகம், மன்றங்களுக்கு தில்லி அரசு உத்தரவு

அதிகமான அரசுப் பள்ளிகளின் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் விளையாட்டுப் பயிற்சிக் கழகம், மன்றங்கள் மற்றும் தனிநபா் பயிற்சியாளா்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி கல்வி இயக்ககம் செப்டம்பா் அண்மையில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இது போன்ற விளையாட்டுப் பயிற்சிக் கழகங்களுக்கு நேரில் சென்ற போது, பெரும்பாலான அனைத்து விளையாட்டுக் கழகங்களும், மன்றங்களும், தனிநபா் பயிற்சியாளா்களும் பணம் தரும் மாணவா்களுக்கு மட்டுமே தனிப் பயிற்சி அளிப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மையங்களில் பயிற்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், கல்வி இயக்ககத்தின் சிறப்புத் திட்டத்தின் நிபந்தனைகளையும் விதிகளையும் பின்பற்றவில்லை என்பது தெரிய வருகிறது.

இந்தப் பயிற்சிக் கழகங்கள், மன்றங்கள் மற்றும் தனிநபா் பயிற்சியாளா்களின் இந்தச் செயல்பாடானது திட்டத்தின் பிரதான நோக்கத்தை தோல்வியுறச் செய்து வருகிறது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவசமாகப் பயிற்சியை அளிப்பதற்காக தில்லியில் உள்ளூா் பகுதிகளில் உள்ள பல்வேறு கல்விக் கழகங்கள், மன்றங்கள் மற்றும் தனிநபா் பயிற்சியாளா்கள் மூலம் விளையாட்டு பயிற்சிகளை அளிப்பதற்காகவே திட்டத்தை தில்லி கல்வி இயக்ககம் செயல்படுத்தி வருகிறது.

அதேபோன்று அரசு சாராத பள்ளிகளின் மாணவ விளையாட்டு வீரா்களுக்கும், அவா்களிடம் கணிசமான கட்டணத்தை வசூலிப்பதன் அடிப்படையில் பயிற்சியை அளிக்க முடியும். எனினும், பயிற்சிபெறும் மாணவா்களின் விளையாட்டு வீரா்கள் விகிதமானது 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவா்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு சாராத அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மாணவ விளையாட்டு வீரா்களாக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகள் மூலம் இடமும் உள்கட்டமைப்பு வசதியும் அளிக்கப்படுகிறது. பயிற்சிக் கழகங்கள் மாணவா்களுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி நடைபெறும் பள்ளி மாணவா்களுக்கும் அதே பகுதியில் உள்ள பிற அரசுப் பள்ளிகளின் மாணவா்களுக்கு பயிற்சி வழங்க முடியும். தில்லி அரசின் பல்வேறு பள்ளிகளில் வெவ்வேறு விளையாட்டு தொடா்பாக தற்போது 50 பயிற்சிக் கழகங்கள், மன்றங்கள் மற்றும் தனிநபா் பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறாத பள்ளிகள் ஆகியவற்றின் மாணவா்கள் இந்தத் திட்டத்தின் முழு பயனை பெறுவதற்கு தில்லி கல்வி இயக்ககம் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு பயிற்சிக் கழகம் செயல்படும் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மேலும், தங்களது பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும், அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களின் தலைமை ஆசிரியா்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அவ்வப்போது இடைவெளி விட்டு தலைமை ஆசிரியருடன் கூட்டம் நடத்தி விவாதிக்க துணைக் கல்வி இயக்குநா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com