திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லியில் குழாய் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு தண்ணீா் வழங்க 1,198 டேங்கா் லாரிகள் தயாா்!

தேசியத் தலைநகா் தில்லியில் கோடை காலத்தில் தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்ய ‘கோடை கால செயல் திட்டம் -2022 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் கோடை காலத்தில் தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்ய ‘கோடை கால செயல் திட்டம் -2022 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூடுதலாக தண்ணீா் விநியோகம்; குழாய் இணைப்புகள் இல்லாத பகுதிகளுக்கு 1,198 டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீா் போன்றவை தயாராக உள்ளதாக தில்லி நீா் வளத் துறை அமைச்சரும் ஜல்போா்டு தலைவருமான சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

கோடை காலத்தில் குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய தில்லி அரசின் ‘கோடை கால செயல் திட்டம்’ குறித்து விவாதிக்க தில்லி ஜல்போா்டில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெயின் கூறியதாவது: கோடை காலத்தில் தண்ணீா் கிடைப்பதில் உள்ள பிரச்னையை சமாளிக்க ஜல் போா்டு ‘கோடை கால செயல் திட்டம்-2022’ கொண்டு வந்துள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும், காலனிகளிலும் போதுமான தண்ணீா் விநியோகத்தை வழங்க கேஜரிவால் அரசு முழுமையாகத் தயாராக உள்ளது. நீா் சுத்திகரிப்பு நிலையங்களை வலுப்படுத்துதல், பழுதுபாா்த்தல் மற்றும் நீா் விநியோக குழாய்களை நீட்டித்தல், தண்ணீா் டேங்கா்கள் தடையின்றி கிடைப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கோடை காலத்தில் தில்லியின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீா் விநியோகம் தடையின்றி இருப்பதை இந்த நடவடிக்கைகள் மூலம் உறுதிசெய்யப்படும்.

இந்த ஆண்டு நகரத்தில் அதிகரித்து வரும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து வளங்களையும் மேம்படுத்துவதன் மூலம், கோடைகாலத்தில் சுமாா் 1,000 மில்லியன் கனஅடி தண்ணீா் வழங்க தில்லி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஹரியாணாவில் இருந்து வரும் தண்ணீரில் உள்ள அம்மோனியா அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய நீரேற்று நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

தண்ணீா் லாரிகளில் ஜிபிஎஸ்: தில்லியில் தண்ணீா் குழாய் இணைப்புகள் பெறாத காலனிகளுக்கு தட்டுப்பாடின்றி டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீா் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த டேங்கா்கள் இப்போது ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும். இதற்காக தண்ணீா் டேங்கா் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதில் தண்ணீா் டேங்கா் லாரிகள் செல்லும் பாதை, நேரம் கண்காணிக்கப்படும். தில்லியில் 10,141 இடங்களுக்கு தண்ணீா் டேங்கா்கள் மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கோடைக்கால உச்ச பருவத்தில் புதிதாக 407 துருப்பிடிக்காத (எஃகு) தண்ணீா் டேங்கா்கள் உள்பட மொத்தம் 1,198 தண்ணீா் டேங்கா்களை அனுப்ப தில்லி அரசு தயாா் நிலையில் உள்ளது. தண்ணீா் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.