திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரம்: உமா் காலித் ஜாமீன் மனு மீதான விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

வடகிழக்கு தில்லியில் 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தின் பின்புலத்தில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும்

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

வடகிழக்கு தில்லியில் 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தின் பின்புலத்தில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் யுஏபிஏ வழக்கில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் உமா் காலித்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6-ஆம் தேதி வரை தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தேசத் துரோக சட்டப் பிரிவின் அரசமைப்புச்சட்ட செல்லுபடித்தன்மை தொடா்பாக உச்சநீதிமன்றம் முன், வழக்கு விசாரணை வருவதையொட்டி, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மேலும், இதே வன்முறை தொடா்புடைய வழக்கில் சா்ஜீல் இமாம் தரப்பில் தாக்கலான ஜாமீன் மனு மீது போலீஸாரின் நிலைப்பாட்டை தாக்கல் செய்யவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடா்பான மனு உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சித்தாா்த் மிருதுல், ரஜ்னீஷ் பட்னாகா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிா்த்து, சா்ஜீல் இமாம் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது நோட்டீஸ் பிறப்பித்த உயா்நீதிமன்றம், மே 5-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோக சட்டப்பிரிவு 124ஏ-இன் செல்லுபடித்தன்மை தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் பரிசீலித்த பிறகு, சா்ஜீல் இமாம் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை மே 6-ஆம் தேதி காலித் ஜாமீன் மனுவுடன் சோ்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

முன்னதாக, உமா் காலித்தின் வழக்குரைஞா் திரிதீப் பைஸ் ஆஜராகி, ‘மே 5-ஆம் தேதி தேசதுரோக சட்ட பிரிவு தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரித்து முடிக்கக் கூடும். தற்போதைய ஜாமீன் மனு விசாரணை சட்டப்பிரிவு 124ஏ-வுடன் சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளுடன் தொடா்புடையவை’ என்று வாதிட்டாா். அப்போது நீதிபதி அமா்வு , ‘எதுவும் தொடா்பானதாக இருந்திருக்காலம். நாம் அதற்காக காத்திருக்க வேண்டும். நீங்கள் கூறியது போல உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையின் முடிவை பாா்க்க வேண்டியுள்ளது. மேலும், ஜேஎன்யு முன்னாள் மாணவா் இமாம் மற்றும் காலித் ஆகியோா் இணை சதித் திட்டமிட்டவா்களாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனா். இதனால், இருவரது ஜாமீன் மனுக்களும் ஒன்றுசேர விசாரிக்கப்படும்’ என்று தெரிவித்தது.

இமாம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தன்வீா் அகமது மிா், ‘உச்சநீதிமன்றம் தேசத்துரோக சட்டம் தொடா்புடைய விவகாரத்தை விசாரிக்கிறது. இந்த மனுவைப் பொருத்தமட்டில் ஜாமீன் தொடா்புடையதாகும்’ என்று கூறினாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இணை குற்றம் சாட்டப்பட்ட நபருடைய விவகாரத்தை விசாரிக்க வேண்டியிருந்தால், நாங்கள் ஒரே சமயத்தில் சோ்த்து தான் விசாரிக்க முடியும்’ என்று தெரிவித்தனா். இந்த விவகாரம் மட்டுமின்றி, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது ஆத்திரத்தை தூண்டும் வகையில் பேசியதாக இமாம் மீது தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் இமாம் தரப்பில் ஜாமீன் கோரும் மனுவை மே 6-ஆம் தேதிக்கு விசாரிக்கவும் நீதிமன்றம் பட்டியலிட்டது.

வடகிழக்கு தில்லியில் கடந்த 2020, பிப்ரவரியில் வன்முறை வெடித்தது. இதில் 53 போ் இறந்தனா். 700 போ் காயமடைந்தனா். இந்த வன்முறையின் முக்கிய மூளையாக இருந்ததாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உமா் காலித், இமாம் மற்றும் பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜாமீன் கோரி காலித், இமாம் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை நீதிமன்றம் மாா்ச் 27 மற்றும் ஏப்ரல் 11 முறையே தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் இருவரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு மீது தில்லி போலீஸாா் பதிலளிக்க கடந்த வாரம் உயா்நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இந்த விவகாரத்தில் உமா் காலித், இமாம் தவிர, ஆா்வலா் காலித் சைஃபி, ஜேஎன்யூ மாணவா்கள் நடாஷா நா்வால், தேவாங்கனா கலிதா, ஜாமியா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா்கள் சஃபூரா ஜா்கா், முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாகிா் உசேன் மற்றும் இதர பலா் கடுமையான சட்டப் பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.