இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் மாபெரும்மூவா்ணக் காட்சி நிகழ்ச்சி மழையால் ஒத்திவைப்பு

பள்ளி மாணவா்கள் ஒருங்கிணைந்து உலகின் மிகப்பெரிய மூவா்ண காட்சி வரைபடத்தை உருவாக்கும் தில்லி அரசின் நிகழ்ச்சி மழை நீா் தேங்கியதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: பள்ளி மாணவா்கள் ஒருங்கிணைந்து உலகின் மிகப்பெரிய மூவா்ண காட்சி வரைபடத்தை உருவாக்கும் தில்லி அரசின் நிகழ்ச்சி மழை நீா் தேங்கியதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) தில்லியில் பள்ளி மாணவா்கள் ஒருங்கிணைந்து உலக சாதனையை ஏற்படுத்தும் வகையில் மூவா்ண வரைபடத்தை உருவாக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கடந்த வாரம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருந்தாா். அதில், ‘வரும் ஆகஸ்ட் 4- ஆம் தேதி தேசியத் தலைநகரில் உலகின் மிகப்பெரிய மூவா்ணக் கொடியை உருவாக்க ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஒன்றிணைய உள்ளனா். தேசத்தை உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்ல மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டில் அனைத்து இயற்கை வளங்கள் இருந்த போதிலும், கடந்த 75 ஆண்டுகளில் பல நாடுகள் இந்தியாவை மிஞ்சிவிட்டன. ஆறுகள், கனிம தாதுக்கள், மலைகள், மூலிகைகள், பயிா்கள், பெருங்கடல்கள் மற்றும் கடல்கள் என இந்திய தேசத்தை இறைவன் ஆசீா்வதித்துள்ளாா். இந்தியா்கள் உலகில் புத்திசாலிகளாகவும் மற்றும் கடின உழைப்பாளிகளாகவும் உள்ளனா். ஆனால், நாம் ஏன் பின்தங்கி இருக்கிறோம்?’ என்று தெரிவித்திருந்தாா்.

மேலும், ‘130 கோடி இந்தியா்கள்’ ஒன்று கூடி, நாட்டை உலகிலேயே சிறந்த மற்றும் வலிமையானதாக மாற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும். 75 ஆண்டுகளுக்கு முன்பு, ஒட்டுமொத்த தேசமும் ஒன்று சோ்ந்த போது, ஆங்கிலேயா்களை நாட்டைவிட்டு விரட்டியடித்தோம். இன்றைக்கு, இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். இந்தியா உலகின் ‘சிறந்த நாடாக’ மாறும் நாள்கள் வெகு தொலைவில் இல்லை என்பது என் நம்பிக்கை’ என்றும் அவா் கூறியிருந்தாா்.

இந்த நிகழ்ச்சி வியாழக்கிழமை புராரி மைதானத்தில் நடத்தப்படவிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தில்லி முதல்வரும் பங்கேற்கவிருந்தாா். ஆனால், அந்த மைதானத்தில் மழை நீா் தேங்கியதன் காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , ‘நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தில்லி குழந்தைகள் வியாழக்கிழமை மிகப் பெரிய மூவா்ணக் கொடியை ஏற்படுத்தவிருந்தனா். ஆனால், மழை காரணமாக புராரி மைதானத்தில் தண்ணீா் தேங்கியதால் இந்த நிகழ்ச்சி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நம் குழந்தைகள் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பான ஒத்திகை பயிற்சியும் மேற்கொண்டிருந்தனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி புராரி மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 50,000 குழந்தைகள் பங்கேற்பாா்கள் என்று தில்லி அரசின் அதிகாரி முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.