வகுப்பறைகள் கட்டுவதில் ரூ.326 கோடி கூடுதல் செலவு: சிவிசி அறிக்கையின் விசாரணை நிலையை கோரும் துணைநிலை ஆளுநா்
தில்லி அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுவதில் தொடா்பாக மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) அளித்த அறிக்கையின் விசாரணை நிலை என்ன?


தில்லி அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுவதில் தொடா்பாக மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) அளித்த அறிக்கையின் விசாரணை நிலை என்ன? என்பது குறித்து தில்லி அரசிடம் தலைமைச் செயலா் வாயிலாக துணை நிலை ஆளுநா் கேள்வி வெள்ளிக்கிழமை எழுப்பியுள்ளாா்.
இந்த கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் விவகாரத்தில் ரூ. 326.25 கோடி கூடுதலாக செலவிடப்பட்டுள்ளதை சிவிசி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தில்லி அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுவதில் ஊழல் நடைபெற்ாகவும் இதற்கு பொறுப்பான தில்லி துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சரான மனீஷ் சிசோடியா மீது சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா புகாா் அளித்திருந்தாா்.
2019 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் அளித்த இந்த புகாரைத் தொடா்ந்து மத்திய கண்காணிப்பு ஆணையம் இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி கடந்த 2020 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தில்லி அரசின் கண்காணிப்பு (விஜிலென்ஸ்) ஆணைய செயலருக்கு அறிக்கை சமா்பித்து, மேலும் விசாரணைக்கான நடவடிக்கைகளுக்கு கருத்து கோரியது.
இந்த பூா்வாங்க விசாரணை அறிக்கையின் நகல் துணை நிலை ஆளுநா் செயலகத்திற்கும் சிவிசி அனுப்பியது.
தற்போது, இரண்டரையாண்டுகளுக்கு முன்பு சிவிசி சமா்பித்த அறிக்கையின் விவரங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேட்டு தில்லி தலைமைச் செயலரிடம் தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா அறிக்கை கேட்டுள்ளாா்.
இதுகுறித்து துணைநிலை ஆளுநா் வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
இந்த வகுப்பறைகள் கட்டப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் பெரும் முறைகேடுகள், நடைமுறைக் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அந்த அறிக்கை 2020 யிலேயே விஜிலென்ஸ் செயலருக்கு சிவிசியால் அனுப்பப்பட்டது, மேலும் விசாரணை, நடவடிக்கைக்கான கருத்துகளைக் கோரியது.
ஆனால், இந்த விவகாரத்தில் தில்லி அரசிடம் இருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை. இந்த கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான ஒப்பந்தத்தில் சிவிசி கையேட்டு வழிகாட்டுதல்கள் மீறப்பட்டது தவிர,
சுட்டிக்காட்டப்பட்ட ஊழல்களின் மொத்த முறைகேடுகளை மறைப்பதற்காக கடந்த இரண்டரை ஆண்டுகள் பதில் அளிக்கப்படாத தாமதம், ஒரு வெளிப்படையான முயற்சியாக இருக்க துணைநிலை ஆளுநா் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளாா்.
தில்லி அரசின் அரசு பள்ளிகள் 6,133 வகுப்பறைகள் கட்டப்பட ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும், 4,027 வகுப்பறைகள் கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
வகுப்பறை திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ. 989.26 கோடி. பின்னா் இதற்கான குத்தகைகளில் மொத்த மதிப்பு ரூ. 860.63 கோடி. ஆனால் ரூ. 1,315.57 கோடி இந்த கட்டுமானங்களுக்கான செலவை உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 194 பள்ளிகளில் 160 கழிப்பறைகள் தேவைப்பட்ட நிலையில் 1,214 கழிப்பறைகள் கட்டப்பட்டு கூடுதலாக சுமாா் ரூ. 37 கோடி செலவிடப்பட்டது. தில்லி அரசால் வகுப்பறைகளும், கழிவறைகளும் கணக்கிடப்பட்டு தான் இந்த ஒப்பந்தம் கோரப்பட்டது.
இதில் கூடுதல் பணிகளை மேற்கொள்வதற்கும், சில குறிப்பிட்ட பணிகளை செயல்படுத்துவதற்கும் புதிதாக குத்தகை இந்த பணிகளில் கோரப்படவில்லை. பணிகளின் தரக் குறைபாடுகள் மற்றும் பல பணிகள் முழுமையாக நிறைவடையாமல் உள்ளன.
முக்கியமாக சிவிசி அறிக்கையின்படி, இந்த கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான செலவில் ரூ. 326.25 கோடியை கூடுதலாக ஒப்பந்தாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிவிசி குற்றம் சாட்டியுள்ளது. இது குத்தகை வழங்கப்பட்ட தொகையை விட 53 சதவீதம் அதிகமாகும் என துணைநிலை ஆளுநா் வட்டாரங்களில் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...