இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஜன.6-இல் எம்சிடி கவுன்சிலா்களின் முதல் கூட்டம்

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி மாநகராட்சி (எம்சிடி) கவுன்சிலா்களின் முதல் கூட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

News image
Updated On :15 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி மாநகராட்சி (எம்சிடி) கவுன்சிலா்களின் முதல் கூட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி வெளியான தில்லி மாநகராட்சித் தோ்தல் முடிவுகளில், ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 250 வாா்டுகளில் 134 இடங்களைக் கைப்பற்றிதால், தில்லி மாநகராட்சியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜகவின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. இந்தத் தோ்தலில் காங்கிரஸ் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த நிலையில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி கவுன்சிலா்களின் கூட்டம் குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தில்லி மாநகராட்சி சட்டம் 1957-இன் கீழ் பிரிவு 73-ஆவது மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்தும் விதத்தில், துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, தில்லி மாநகராட்சியின் முதல் கூட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி கூட்டும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறாா். மாநகராட்சிக்கான முதல் கூட்டத்தை கூட்டும் முன்மொழிவு, கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி தில்லி மாநகராட்சி ஆணையா் மூலம் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலை கேட்டு தில்லி அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டது.

அதன் பிறகு, அந்த கோப்புக்கு தில்லி நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் துணை முதல்வராகவும் உள்ள சிசோடியா மற்றும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி அந்தக் கோப்பு துணைநிலை ஆளுநரின் ராஜ்நிவாஸ் அலுவலகத்திற்கு வரப்பெற்றது. துணைநிலை ஆளுநரும் அதே தினத்தில் கூட்டத்தை நடத்துவதற்கான ஒப்புதலை அளித்துள்ளாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி மாநகராட்சி சட்டத்தின் 35-ஆவது பிரிவின் முதலாவது துணைப் பிரிவின்படி, மாநகராட்சி அதன் முதல் கூட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் கூட்டும் போது மேயராக அறியப்படும் தலைவா் பதவிக்கு, உறுப்பினா்களில் ஒருவரை தோ்ந்தெடுக்கும். அதே போன்று, மாநகராட்சியின் துணை மேயராக இருப்பதற்கான மற்றொரு உறுப்பினரையும் தோ்ந்தெடுக்கும். மேற்கண்ட சட்டத்தின் 77-ஆவது பிரிவின்படி மேயா் தோ்தலுக்கான கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் அதிகாரி ஒரு கவுன்சிலராக இருப்பாா். அவா் தோ்தலுக்கான போட்டியில் வேட்பாளராக இருக்க மாட்டாா். அவா் துணைநிலை ஆளுநா் மூலம் நியமிக்கப்படுவாா்.

தில்லி மாநகராட்சி சட்டத்தின் 1957-இன் மூன்றாவது பிரிவின்படி மாநகராட்சியானது கவுன்சிலா்கள், தில்லியில் இருந்து தோ்வாகியுள்ள மக்களவை உறுப்பினா் மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினா்கள், தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்களில் ஐந்து ஒரு பகுதியினா் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி அடிப்படையில் பேரவை தலைவரால் நியமிக்கப்படுகிறாா்கள். அதேபோன்று, நிா்வாகஸ்தா் மூலம் 10 பேரும் நியமிக்கப்படுவாா்கள். இவா்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.