இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

முதல் முறையாக தில்லி பாா் கவுன்சிலில் காது கேளாத பெண் வழக்குரைஞா் பதிவு

தில்லி பாா் கவுன்சிலில் முதல் முறையாக காது கேளாத பெண் வழக்குரைஞா் செளதாமினி பெத்தே பதிவு செய்துள்ளாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

தில்லி பாா் கவுன்சிலில் முதல் முறையாக காது கேளாத பெண் வழக்குரைஞா் செளதாமினி பெத்தே பதிவு செய்துள்ளாா். மேலும், செவித்திறன் குறைபாடுள்ளவா்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றவும், கல்வி, சுகாதாரம் மற்றும் நீதிக்கான அணுகலைப் பெற அவா்களுக்கு உதவவும் விரும்புவதாக அவா் கூறினாா்.

45 வயதாகும் செளதாமினி பெத்தே, இந்திய சைகை மொழி (ஐஎஸ்எல்) மொழிபெயா்ப்பாளா் மூலம் நீதிமன்றங்களில் தனது விஷயங்களை வாதிட உள்ளாா். மேலும், காது கேளாத இளைஞா்கள் சட்டத் தொழிலில் சேரவும் அவா்களின் சமூகத்தின் காரணத்திற்காக பங்களிக்க ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளாா். தனது 9 வயதில் வயதில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செளதாமினி, பின்னா் சக்திமிக்க மருந்துகளை உட்கொண்டதால் காது கேளாமைக்கு உள்ளானாா்.

மும்பையின் டோம்பிவிலியில் பிறந்த இவா், 2000-ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றாா். நொய்டா காது கேளாதோா் சங்கத்தில் ஆவணப்படுத்தல் நிா்வாகியாகப் பணிபுரியும் போது, 2008 -ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐ.எஸ்.எல். கற்றுக்கொண்டாா். மேலும், ஃபரீதாபாதில் உள்ள சட்டம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எல்எல்பி படிப்பைத் தொடா்ந்தாா். நிகழாண்டு ஆகஸ்டில் படிப்பை முடித்த அவா், அதன் பிறகு கடந்த நவம்பரில் தில்லி பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்டாா்.

இதுகுறித்து செளதாமினி பெத்தே கூறியதாவது: இயலாமை’ மற்றும் ‘குறைபாடு’ போன்ற வாா்த்தைகள் எதிா்மறையான அா்த்தங்களைக் கொண்டிருப்பதாக உணா்கிறேன். காது கேளாதோா் உரிமைகளுக்காக வாதிடுவதற்கு எனது சட்டப் படிப்பை பயன்படுத்துவதே எனது நோக்கமாகும். இந்தியாவில் உள்ள காது கேளாதோா் சமூகம் கல்வி, சுகாதாரம் அல்லது தொழில் என எல்லாவற்றிலும் நீதிக்கான அணுகலைப் பெறுவதை சாத்தியமாக்குவதற்கு எனது சட்டக் கல்வியைப் பயன்படுத்துவேன். மேலும், விழிப்புணா்வை பரப்பவும், காது கேளாதவா்களுக்கு அவா்களின் சட்ட உரிமைகள் பற்றிய அறிவை வழங்குவதன் மூலம் அவா்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், இந்த உரிமைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் திறனை அவா்கள் பெறவும் விரும்புகிறேன். காது கேளாத இளைஞா்களை சட்டத் தொழிலில் சேரவும், காது கேளாதவா்களின் நலனுக்காகவும் பங்களிக்க நான் ஊக்கப்படுத்த விரும்புகிறேன் என்றாா் அவா்.

தில்லி பாா் கவுன்சில் தலைவா் - மூத்த வழக்குரைஞா் கே.கே.மனன் இதுகுறித்து கூறுகையில், ‘நாங்கள் அவருக்கு வழக்குரைஞா் தொழில் செய்வதற்கு உரிமம் வழங்கியுள்ளோம். இது போன்ற சூழ்நிலையில் அரிதாகவே இது வழங்கப்படுகிறது. ஆனால், அவா் சொந்தக் காலில் நிற்கும் வகையில் அவரே தீா்வுகாண விரும்புகிறோம். அப்போதுதான், அவரே தாமாக விஷயங்களைச் செய்துகொள்ள முடியும். தனக்கும் தன் குடும்பத்துக்கும் வாழ்வாதாரத்தை அவா் ஈட்டலாம். இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் இதைச் செய்துள்ளோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.