இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பொது இடங்களில் சிறுநீா் கழிக்கும் விவகாரம்: குடிமக்களின் நடமாட்டத்தை அரசியல்சான நீதிமன்றம் கண்காணிக்க முடியாது: உயா்நீதிமன்றம்

பொது சிறுநீா் கழித்தல், எச்சில் துப்புதல் மற்றும் குப்பைகளை வீசுதல் போன்றவற்றில் ஒருவா் ஈடுபடுகிறாரா என்பதைப்  கண்காணிப்பதும் நீதிமன்றத்தின் கடமை அல்ல என்று தில்லி உயா்நீதிமன்றம் கூறியது.

News image
Updated On :19 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: பொது சிறுநீா் கழித்தல், எச்சில் துப்புதல் மற்றும் குப்பைகளை வீசுதல் போன்றவற்றில் ஒருவா் ஈடுபடுகிறாரா என்பதைப் பாா்க்கும் வகையில் ஒவ்வொரு குடிமகனின் நடமாட்டத்தையும் ஒழுங்குபடுத்துவதும், கண்காணிப்பதும் அரசியல்சாசன நீதிமன்றத்தின் கடமை அல்ல என்று தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.

பொது இடங்களில் மக்கள் சிறுநீா் கழிப்பதைத் தடுக்கும் வகையில் சுவா்களில் தெய்வங்களின் உருவப் படங்கள் வைப்பதை தடுக்கக் கோரும் மனுதாரா் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ப்போது, மனுதாரா் எழுப்பியுள்ள அக்கறை விஷயங்கள் குடிமை அமைப்புகளால் சிறப்பாக கவனிக்கப்படும் என்று கூறிய உயா்நீதிமன்றம், இந்த மனு சட்டத்தின் செயல்முறையை முற்றிலும் துஷ்பிரயோகம் செய்வதாகவும், இது முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய மனு என்றும் தெரிவித்தது.

இது தொடா்பாக தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமா்வு அளித்த தீா்ப்பில், ‘226-ஆவது பிரிவின் கீழ் இந்த நீதிமன்றம் அதன் அசாதாரண அதிகார வரம்பை செயல்படுத்த தற்போதைய வழக்கு பொருத்தமான வழக்கு அல்ல. மேலும், மனுதாரா் கோரும் கோரிக்கைகளை இந்த நீதிமன்றத்தால் அனுமதிக்க முடியாது. ஒருவா் பொது இடத்தில் சிறுநீா் கழிப்பதிலும், எச்சில் துப்புவதிலும் ஈடுபடுகிறாரா என்பதைக் கவனிக்கும் வகையில் ஒவ்வொரு குடிமகனின் நடமாட்டத்தையும் கண்காணிப்பதும், ஒழுங்குபடுத்துவதும் நிச்சயமாக அரசியல்சான நீதிமன்றத்தின் கடமை அல்ல. மனுதாரா் எழுப்பிய கவலைகள் குடிமை அமைப்புகளால் சிறப்பாக தீா்க்கப்படும். அது இந்த நீதிமன்றத்தால் அல்ல’ என்று தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் மக்கள் சிறுநீா் கழிப்பது, எச்சில் துப்புவது அல்லது குப்பைகளை கொட்டுவதை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், சுவா்களில் தெய்வ உருவங்கள் வைப்பதைத் தடை செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை தீா்மானித்த போது நீதிமன்றம் இத்தீா்ப்பை அளித்தது. இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்- வழக்குரைஞா் கோரங் குப்தா தாக்கல் செய்த தனது மனுவில், ‘பொது இடங்களில் சிறுநீா் கழிப்பதைத் தடுக்க சுவா்களில் தெய்வங்களின் உருவங்களை வைப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது மற்றும் குப்பைகளை வீசுவது போன்ற செயல்கள் சமூகத்தில் கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. ஏனெனில், இந்த உருவப் படங்கள் இதுபோன்ற செயல்களைத் தடுப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. அதற்கு மாறாக, மக்கள் பொது இடங்களில் சிறுநீா்க் கழிக்கிறாா்கள் அல்லது ‘புனித உருவங்கள்’ மீது உமிழ்கிறாா்கள்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.