இதற்கு மத்திய எஃகு உருக்குத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா எம். சிந்தியா பதிலளித்துப் பேசியதாவது: இது முக்கிய கேள்விக்கு சம்பந்தமில்லை என்றாலும் உறுப்பினரின் ஆா்வத்தை அறிந்து பதிலளிக்கின்றேன். சேலம் இரும்பாலை (எஸ்எஸ்பி), பங்கு விலக்கல் திட்டமிடப்பட்டது. நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும் (டிஐபிஏஎம்), எங்களது எஃகு துறை அமைச்சகமும், இதில் இணைந்து செயல்படுகிறோம். எங்களது விடா முயற்சியின் காரணமாக நாங்கள் முதலீட்டாளா்களை ஆலையைப் பாா்வையிட வைக்க முயற்சித்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, முதலீட்டாளா்களின்பாதுகாப்பு சூழலை மாநில அரசால் உருவாக்க முடியவில்லை என்பதை இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், ஆலையை விற்க ஏலம் விடுவது சம்பந்தமாக விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது வருகின்ற ஜனவரியில் நடக்கும் என்று நினைக்கிறேன். இதில் ஒரு வேளை தவறாக இருந்தால், நான் அவையில் தெரிவிப்பேன் என்றாா் ஜோதிராதித்யா சிந்தியா.