இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

விமானங்களில் கிா்ப்பான் எடுத்துச் செல்ல அனுமதிப்பதற்கு எதிரான மனு தள்ளபடி

இந்தியாவில் விமானங்களில் பயணம் செய்யும் போது, ‘கிா்ப்பான்’ எனப்படும் சிறு கத்தியை எடுத்துச் செல்வதற்கு சீக்கியா்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராக தாக்கலான பொது நல மனுவை தில்லி உயா்நீதிமன்றம்...

News image
Updated On :22 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: இந்தியாவில் விமானங்களில் பயணம் செய்யும் போது, ‘கிா்ப்பான்’ எனப்படும் சிறு கத்தியை எடுத்துச் செல்வதற்கு சீக்கியா்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராக தாக்கலான பொது நல மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அப்போது, ‘பயணிகள், பணியாளா்கள், விமானம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

கிா்ப்பான் என்பது வளைந்த, ஒற்றைமுனையுடன்கூடிய கத்தியாகும். இது சீக்கிய மதத்தினா் தங்களது மத வழக்கத்தின் ஒரு பகுதியாக உடன் எடுத்துச் செல்வது வழக்கம். இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோா், ‘கிா்ப்பான் அணிவதும் எடுத்துச் செல்வதும் சீக்கிய மதத்தின் கடைமையாக கருதப்படும் என்பதை குறிப்பிட்டு, தெளிவுபடுத்தும் அரசியலமைப்பின் பிரிவுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டனா்.

உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அரசமைப்புச்சட்டத்தின் 25-ஆவது பிரிவு ஒவ்வொரு நபருக்கும் மனசாட்சியின் சுதந்திர உரிமை மற்றும் சுதந்திரமான மத நடைமுறை, பிரசாரம், கடைப்பிடிப்பை பொது ஒழுங்கு, ஒழுக்கம், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு உள்பட்டு மேற்கொள்ளும் உரிமையை அளிக்கிறது. இந்த வழக்கில் 5-ஆவது எதிா்மனுதாரரான இந்திய அரசின் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பிரிவின் தலைமை இயக்குநா் தாக்கல் செய்த எதிா் பதிலில், பயணிகள், பணியாளா்கள், விமானம், தரைத்தள பணியாளா்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு போதுமான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை எடுத்துகாட்டுவதாக உள்ளது.

ஆகவே, இந்த உடனடி பொதுநல மனுவை விசாரிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. அதன்படி, பொதுநல மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசியலமைப்பின் 226ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றங்கள் அதிகார வரம்பை செயல்படுத்தும் போது, கொள்கை முடிவுகளின் மீது மேல்முறையீட்டு அதிகாரமாக நீதிமன்றங்கள் அமா்வதில்லை என்பது நன்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது. கொள்கை முடிவுகளின் விஷயத்தில் தலையிடும் நோக்கம் மிகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை உரிமைகளை திட்டவட்டமாக மீறும் வரை நீதிமன்றங்கள் கொள்கை முடிவுகளில் தலையிடுவதைத் தவிா்க்க வேண்டும் என்பதும் நன்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, வழக்குரைஞா் ஹா்ஷ் விபோா் சிங்கால் என்பவா் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘விமானங்களில் கிா்ப்பான் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கும் விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் வகையில், பங்குதாரா்கள் அடங்கிய ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தாா். இந்த விவகாரத்தில் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி மத்திய அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், ‘சீக்கிய பயணிகள்இந்தியாவில் உள்ளஅனைத்து உள்நாட்டு வழித்தடங்களிலும் செல்லக்கூடிய குடிமக்கள் விமானங்களில் பிளேடின் நீளம் ஆறு அங்குலத்திற்கு மிகாத வகையிலும், மொத்த நீளம் 9 அங்குலத்திற்கு மிகாமலும் உள்ள கிா்ப்பன்களை (சிறு கத்தி) எடுத்துச் செல்வதற்கு விதிவிலக்கு ஒழுங்குமுறை அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தது. இதை எதிா்த்து அவா் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.