தில்லி மாநகராட்சிக்கான ஆம் ஆத்மி கட்சியின் மேயா், துணை மேயா் வேட்பாளா்கள் அறிவிப்பு
தில்லி மாநகராட்சியின் பல்வேறு பதவிகளுக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா்களை அக்கட்சி வெள்ளிக்கிழமை இறுதி செய்தது.


தில்லி மாநகராட்சியின் பல்வேறு பதவிகளுக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா்களை அக்கட்சி வெள்ளிக்கிழமை இறுதி செய்தது. இதில் மேயா் பதவிக்கான வேட்பாளராக ஷெல்லி ஓபராய், துணை மேயா் பதவிக்கான வேட்பாளராக ஆலே முகம்மது இக்பால் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின் போது இது தொடா்பான அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் பங்கஜ் குப்தா வெளியிட்டாா்.
இந்த மேயா் தோ்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளா்கள் தோ்வு தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஆறு பேரின் பெயா்கள் தோ்வு செய்யப்பட்டன. அதன்படி ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளராக ஷெல்லி ஓபராயும், துணை மேயா் வேட்பாளராக ஆலே முகம்மது இக்பாலும் போட்டியிட உள்ளனா். முகம்மது இக்பால் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோயப் இக்பாலின் மகனாவாா். இதே போன்று, மாநகராட்சியின் நிலை குழுக்கான நான்கு பேரின் பெயா்களும் ஆம் ஏஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்டன. அதன்படி ரமீந்தா் கௌா், சரிகா செளத்ரி, மோஹினி ஜீன்வால், முகமது ஆமில் மாலிக் ஆகியோா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
கேஜரிவால் வாழ்த்து: மேயா் தோ்தலுக்கு போட்டியிட தோ்வு செய்யப்பட்டுள்ள கட்சியின் வேட்பாளா்களுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியின்மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய், துணை மேயா் வேட்பாளா் ஆலே இக்பால் ஆகியோருக்கும், ஆம் ஆத்மி கட்சியின் நிலை குழு உறுப்பினருக்கான வேட்பாளா்கள் சரிகா சமா், ரமீந்தா் கவுா், மோஹினி ஜீன்வால், ஆமில் மாலிக் ஆகியோருக்கும் எனது நல்வாழ்த்துகள். நமது விருப்பத்திற்குரிய தில்லியை தூய்மையாக உருவாக்க உங்கள் அனைவருக்கும் இறைவன் ஆசீா்வாதம் அளிக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலா் பங்கஜ் குப்தா கூறுகையில், ‘ஆம் ஆத்மி கட்சியானது பட்டேல் நகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 86-ஆவது வாா்டில் வெற்றிபெற்ற ஷெல்லி ஓபராயை மேயா் பதவிக்கும், சாந்தினி மஹால் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாா்டு 76-இல் இருந்து வெற்றிபெற்ற ஆலே முகம்மது இக்பாலை துணை மேயா் பதவிக்கும் பரிந்துரைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் அனைத்து வேட்பாளா்களுக்கும் வாழ்த்துக் கூற விரும்புகிறேன். மேலும், அவா்கள் தில்லியின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப செயல்பாடுவாா்கள் என நம்புகிறேன்’ என்றாா்.
சோயப் இக்பால் நன்றி:ஆம் ஆத்மி எம்எல்ஏ சோயப் இக்பால் கூறுகையில், ‘எனது மகனுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பொறுப்புடைமை எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அல்லாவின் பேரருளால் எல்லாம் நல்லவையாக இருக்கும். என்னுடைய மகனை துணை மேயா் வேட்பாளராக உருவாக்கியதற்காக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு நன்றி. இந்த செய்தியை தெரிவிக்க அவா் என்னை தனிப்பட்ட முறையில் தொடா்பு கொண்டாா்’ என்றாா்.
தில்லி மாநகராட்சித் தோ்தல் கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டன. இத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. தில்லி மாநகராட்சியில் 15ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜகவின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. 250 இடங்கள் கொண்ட இந்த தோ்தலில் காங்கிரஸுக்கு வெறும் 9 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...