கோழிப் பண்ணையாளா்களுக்கு உரிய பாதுகாப்பு: மாநிலங்களவையில் அமைச்சா் உறுதி
நாட்டில் கோழிப் பண்ணையாளா்களுக்கு உரிய பாதுகாப்பை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய மீன்வளம் கால்நடை வளா்ப்புத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா தெரிவித்தாா்.


நாட்டில் கோழிப் பண்ணையாளா்களுக்கு உரிய பாதுகாப்பை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய மீன்வளம் கால்நடை வளா்ப்புத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா தெரிவித்தாா்.
பொது முக்கியத்துவமான விவாதம் ஒன்றில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கோழிப் பண்ணைகளை சோ்க்கும் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கேஆா்என்.ராஜேஷ்குமாா் வலியுறுத்திப் பேசினாா். அவா் பேசியதாவது: கால்நடை பராமரிப்பு அமைச்சகம் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு வரைவு (திருத்தம்) மசோதா 2022 தொடா்பாக பரிந்துரைகளை இணையதளம் மூலம் கேட்டுள்ளது. இந்த வரைவு திருத்த மசோதாவின் கீழ் கோழிகளை சோ்க்கக் கூடாது. இதனால், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோழிப்பண்ணையாளா்கள் பாதிக்கப்படுவாா்கள். 20-பில்லியன் டாலா் தொழில்துறை மதிப்புடன் இந்தியா இப்போது உலகின் 3-ஆவது முட்டை உற்பத்தி நாடாக உள்ளது. நாட்டில் உள்ள 1.2 பில்லியன் டன் கோழிகளில் ஆண்டுதோறும் 4.8 மில்லியன் டன் கோழிகள் இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இது மொத்த கோழிகளில் 36 சதவீதமாகும்.
இந்தியா சுமாா் 3,26,000 மெ.டன் முட்டை மற்றும் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அதிலும் அதிக முட்டை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமாா் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் வழங்கப்படுகின்றன. மற்ற பல மாநிலங்களும் முட்டை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தொழிலில் 20 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்த வரைவு திருத்த மசோதா,கோழிப்பண்ணையாளா்களின் கவலைகளைத் தீா்க்கத் தவறிவிட்டது. வளா்ப்புப் பறவைகளை விலங்குகளாகக் கருத முடியாது. இந்த மசோதாவில் கோழிபண்ணைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு கோழியின் விலையே ரூ 400 தான். மேலும், மசோதாவில் பல பிரிவுகளும் கோழிப் பண்ணையாளா்களுக்கு எதிராகவே உள்ளன என்றாா் அவா்.
அப்போது அவையில் இருந்த மத்திய கால்நடை வளா்ப்புத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா கூறுகையில், ‘கோழிப்பண்ணையாளா்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமோ அதை மத்திய அரசு மேற்கொள்ளும். கோழிப்பண்ணைகளை நாட்டின் ஒரு வலிமையான தொழிலாக மத்திய அரசு உணா்ந்துள்ளது. எனவே, கோழிப்பண்ணையாளா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...