ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

பணமோசடி வழக்கில் தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோா் மீது தில்லி நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் புதன்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

News image
Updated On :27 ஜூலை 2022, 4:54 pm

 நமது நிருபர்

புது தில்லி: பணமோசடி வழக்கில் தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோா் மீது தில்லி நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் புதன்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் இந்தக் குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக் கொள்வதற்காக ஜூலை 29-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தாா். நீதிமன்ற வட்டாரத் தகவலின்படி, இறுதி அறிக்கையில் சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி பூனம் ஜெயின், வைபவ் ஜெயின், அங்குஷ் ஜெயின், அஜித் பிரசாத் ஜெயின், சுனில் ஜெயின் மற்றும் நான்கு தனியாா் நிறுவனங்களும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனா்.

சத்யேந்தா் ஜெயின் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா். விசாரணையின் போது, மருத்துவக் காரணங்களுக்காக சத்யேந்தா் ஜெயினின் இடைக்கால ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் ஆய்வு செய்தது. சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளாா். சத்யேந்தா் ஜெயின் மற்றும் பிறருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், ஆகஸ்ட் 24, 2017-ஆம் தேதி மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆா்) அடிப்படையில் பணமோசடி விசாரணையை அமலாக்கத் துறை தொடங்கியது. பிப்ரவரி 14, 2015 முதல் மே 31, 2017 வரையிலான காலகட்டத்தில் சத்யேந்தா் ஜெயின் தில்லி அரசில் அமைச்சராகப் பதவி வகித்த போது தனது வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்துகளை வாங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.