பொதுப் போக்குவரத்து துறையில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில், ஆம் ஆத்மி அரசு கடந்த ஜூலை 18-ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் வா்த்தக ஓட்டுநா்களாக பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான செலவில் 50 சதவீதத்தை தில்லி அரசு பகிா்ந்து கொள்ளும் என்று தெரிவித்திருந்தது. இது தொடா்பாக தில்லி அரசின் போக்குவரத்துத் துறையின் மூலம் வெளியிடப்பட்ட பொது அறிவிக்கையில், ‘தில்லியில் வசிக்கும், மோட்டாா் வாகனங்கள் சட்டம் 1988-இன்படி இலகு ரக மோட்டாா் வாகன பிரிவின் கீழ் ஓட்டுநா் உரிமம் பெறத் தகுதி உள்ள வேலைவாய்ப்பு பெற விரும்பும் பெண்களுக்கு ஓட்டுநா் பயிற்சிக்காக தில்லியில் செயல்படும் டாக்ஸி உரிமையாளா்கள் மற்றும் இணையதள டாக்ஸி நிறுவனங்களிடமிருந்து விருப்பத்தைத் தெரிவிக்க தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அழைப்பு விடுக்கிறது.