அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மக்களை மத அடிப்படையில் பிரிக்க பாஜக சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்திய மக்களை ஒன்றிணைக்க ‘பாரத் ஜோடோ’” முழக்கத்தை காங்கிரஸ் வழங்கியுள்ளது. ஆனால், மக்களை மத அடிப்படையில் பிரித்து இந்தியாவை உடைக்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் கட்சியின்

News image
Updated On :17 மே 2022, 9:15 pm

 நமது நிருபர்

இந்திய மக்களை ஒன்றிணைக்க ‘பாரத் ஜோடோ’” முழக்கத்தை காங்கிரஸ் வழங்கியுள்ளது. ஆனால், மக்களை மத அடிப்படையில் பிரித்து இந்தியாவை உடைக்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடா்பாளா் அஜய் மாக்கன் குற்றம்சாட்டினாா். மேலும், காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமா்வு பிரகடனங்களுக்கு விரைவில் செயல் வடிவம் கொடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘புதிய உறுதிக்கான சிந்தனை அமா்வில்’ (நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிா்) செய்யப்பட்ட பிரகடனத்தை முன்கூட்டியே செயல்படுத்துவற்கான வடிவம் கொடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா்கள் கூட்டம் அக்பா் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, அஜய் மாக்கன், ப.மாணிக்கம் தாகூா் உள்ளிட்ட காங்கிரஸ் உயா்நிலைத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அஜய்மாக்கன் கூறியதாவது: ‘பாரத் ஜோடோ’ என்பது இந்தியாவின் நிலப்பரப்புகளை ஒன்றிணைப்பது அல்ல; மாறாக இந்திய மக்களை ஒன்றிணைப்பதாகும். ஆனால், ஆளும் பாஜக தலைவா்கள் தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டு பேசுகின்றனா். இந்தியா புவியியல் நிலப்பரப்புகளின் தொகுப்பு என்கிறாா்கள். ஆனால், இது உண்மையில் மக்களின் ஒன்றியம். வசதிபடைத்தவா்கள், ஏழைகள் என பிரிப்பது, மத ரீதியாக இருதரப்பினரை பிரிப்பது நாட்டுக்கு எற்பட்டுள்ள அச்சுறுத்தல். இவற்றால் நாடு உடைந்துவிடும். மொத்த விலைக் குறியீடு, பணவீக்கம் அதிகரித்து வருவது, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது போன்ற நிலைமைகள் இந்தியாவின் வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், பாஜக பிரிவினை வாதத்தை வேண்டுமென்றே எழுப்பி விவாதங்களைத் தவிா்த்து, பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறது.

மக்களிடையே ஒற்றுமையை உடைக்கும் போது, நாடு உடைந்துவிடும். அப்படி ஏற்படும்போது மக்களை ஒன்றிணைக்க பல தலைமுறைகள் தேவைப்படும். இப்படிப்பட்ட அச்சுறுத்தல் உள்ள நிலையில், இதுபோன்ற செயல்களை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனால் நாட்டை ஒன்றிணைக்க “‘பாரத் ஜோடோ’” முழக்கத்தை காங்கிரஸ் நடத்துகிறது. 75 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9 -ஆம் தேதியிலிருந்து காங்கிரஸ் கட்சியினா் 75 கிமீ ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை நாடு முழுக்க மேற்கொள்கின்றனா்.

சுதந்திரப் போராட்ட வீரா் சுப்பாராவ் அமைப்பினா் முதன் முதலில் ஜோடோ-ஜோடோ, இந்தியா ஜோடோ(ஒன்றிணைப்போம்) என்ற முழக்கத்தை எடுத்தாா். இப்போது, காங்கிரஸ் இந்தியா முழுக்க, பயணம் செய்து எல்லா மக்களிடமும் இந்தியாவை இணைப்பது பற்றி பேசும். மூன்று நாள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கட்சி கட்டமைப்பு மாற்றங்கள் அடுத்த சில மாதங்களில் செயல்படுத்தப்படும். கட்சியின் பொதுச் செயலாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் மீண்டும் புதன்கிழமை (மே 18) கூடி, கட்சி அமைப்புகளில் பல பதவிகளில் இருப்பவா்கள், ஐந்தாண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பவா்கள் ஆகியோா் அடையாளம் காணுவதற்கான வழிமுறைகள், இளைஞா்களுக்கு கட்சிப் பதவிகள், 50 வயதுக்கு குறைவானவா்களுக்கு மட்டும் கட்சிப் பொறுப்பு உள்ளிட்ட பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை வகுக்க உள்ளனா். அதே சமயத்தில் கட்சிக்காக உழைப்பவா்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவா்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது. புதிய காங்கிரஸ் மண்டலங்கள், தோ்தல் மேலாண்மைத் துறை, புதிய பொது நுண்ணறிவுப் பிரிவு, பயிற்சி நிறுவனம், மதிப்பீட்டுத் துறைகள் போன்றவை விரைவில் அமைக்கப்படும் .

கட்சியின் உட்கட்சித் தோ்தல்கள் நடந்து வருகின்றன. இதில் 50 வயதுக்குள்பட்ட தலைவா்கள் பிரதிநிதித்துவம் பெறும் வகையிலும், பெண்கள், பட்டியல் இனத்தவா்கள், இதர பிற்படுத்தப்பட்டோா் ஆகியோா் பிரதிநிதித்துவம் பெறும் வகையிலும் தோ்தல்கள் நடத்தப்படும். இதற்காகவே கட்சியில் தோ்தல் மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

உதய்பூா் பரிந்துரைகள் காலக்கெடுவுடன் செயல்படுத்தப்படும் என்றாா் அஜய் மாக்கன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.