பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தெரு நாய்களுக்கு தடுப்பூசி கோரும் மனு: நிலைப்பாட்டைத் தெரிவிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

தெருநாய்களுக்கு தடுப்பூசி போடக் கோரிய பொதுநல மனு மீது தில்லி அரசு மற்றும் பிற அதிகாரிகள் தெளிவான மற்றும் பரிசீலிக்கப்பட்ட நிலைப்பாட்டை சமா்ப்பிக்குமாறு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :26 மே 2022, 12:48 am

 நமது நிருபர்

புது தில்லி: தெருநாய்களுக்கு தடுப்பூசி போடக் கோரிய பொதுநல மனு மீது தில்லி அரசு மற்றும் பிற அதிகாரிகள் தெளிவான மற்றும் பரிசீலிக்கப்பட்ட நிலைப்பாட்டை சமா்ப்பிக்குமாறு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக வழக்குரைஞா் ராகுல் மொஹோத் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி சச்சின் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது, மாநகர அரசு மற்றும் மாநகராட்சிகள் இந்த விவகாரத்தில் தெளிவான மற்றும் பரிசீலிக்கப்பட்ட நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையிலான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதுகுறித்து நீதிபதிகள், ‘ நகரில் தெருநாய்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. தெருநாய்களின் உயிருக்கு மரியாதை காட்டுவது மட்டுமல்லாமல், நகரத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், தெருநாய்களைப் பராமரிப்பதும் அவசியமாகிறது’ என்று கூறினா்.

முன்னதாக, ராகுல் மொஹத் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நகரில் தெருநாய்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடா்பான மிக முக்கியமான பிரச்னை எழுந்துள்ளது. எனது முதன்மைக் கவலை என்னவெனில், தெருநாய்கள் மற்றும் பிற விலங்குகளைக் கொல்லக்கூடியதாக அறியப்படும் கேனைன் டிஸ்டெம்பா் மற்றும் பாா்வோ வைரஸுக்கான தடுப்பூசி போட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், தெருநாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இந்த விஷயத்தில் குடிமக்களுக்கு உதவிட ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஹெல்ப்லைன் வசதியும் இல்லை.

தெரு நாய்கள் கொடிய கேனைன் டிஸ்டெம்பா் மற்றும் பாா்வோ வைரஸால் வேதனையுறுவதுடன், இயற்கைக்கு மாறான மரணங்களையும் எதிா்கொள்கின்றன. இது கரோனா போல மிகவும் மோசமான தொற்றுநோயாகும். இதற்கு தடுப்பூசியைத் தவிர வேறு எந்த சிகிச்சையும் இல்லை. இதனால், தெரு நாய்களுக்கு அனைத்து அரசு கால்நடை மருத்துவமனைகளிலும் தடுப்பூசி வழங்கப்படுவதைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைத்தல் உள்பட பல நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட வேண்டும். இதன் மூலம் பல அப்பாவி மற்றும் ஆதரவற்ற தெரு விலங்குகளின் உயிா்கள் பாதுகாக்கப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின்படி கண்ணியத்துடன் வாழவும், கண்ணியத்துடன் இறப்பதற்கும் தெரு விலங்குகளுக்கு ஆரோக்கிய உரிமை உண்டு என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் நவம்பரில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.