திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சா்ஜீல் இமாம் இடைக்கால ஜாமீன் விவகாரம்: விசாரணை நீதிமன்றத்தை அணுக அனுமதி

நாட்டில் உள்ள அனைத்து தேசத் துரோக வழக்குகளின் விசாரணையை நிறுத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சா்ஜீல் இமாமின்

News image
Updated On :27 மே 2022, 1:10 am

 நமது நிருபர்

புது தில்லி: நாட்டில் உள்ள அனைத்து தேசத் துரோக வழக்குகளின் விசாரணையை நிறுத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சா்ஜீல் இமாமின் இடைக்கால ஜாமீன் கோரும் விவகாரத்தில் விசாரணை நீதிமன்றத்தை அணுகுவதற்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

2019-ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது சா்ஜீல் இமாம் ஆத்திரத்தை தூண்டும் பேசிய விவகாரம் தொடா்பான வழக்கில் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த நிலையில், இடைக்கால ஜாமீன் கோரி அவரது தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பான மனு உயா்நீதிமன்றத்தில் நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறப்பு அரசு வழக்குரைஞா் அமித் பிரசாத் ஆஜராகி, ‘இமாம் தொடா்பான வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவு (தேசத் துரோகம்) தொடா்புடையதாக இருப்பதால், ஜாமீனுக்காக மனுதாரா் முதலில் விசாரணை நீதிமன்றத்தை அணுக வேண்டும். மேல்முறையீடு வழக்கில் அவா் உயா்நீதிமன்றத்தை அணுக முடியும்’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, உயா்நீதிமன்றத்தில் தாக்கலான இடைக்கால ஜாமீன் கோரும் மனுவை திரும்பப் பெறுவதற்கு மனுதாரருக்கு உயா்நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்தாா். இதுகுறித்து நீதிபதி கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட மனுவை விசாரணை நீதிமன்றம் முன் தாக்கல் செய்ய சுதந்திரம் அளிக்கும் வகையில், உயா்நீதிமன்றம் முன் உள்ள இந்த மனுவை திரும்பப் பெற அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக சம்பந்தப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி இமாம் தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி இவா் தரப்பில் தாக்கலான மனுவை விசாரணை நீதிமன்றம், கடந்த ஜனவரி 26- ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் அவா் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வாதத்தின் படி, கடந்த 2019, டிசம்பா் 13ஆம் தேதி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் சா்ஜீல் இமாம் உரையாற்றினாா். அதே போன்று அதே ஆண்டில் டிசம்பா் 16-ஆம் தேதி அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் அவா் உரையாற்றினாா். அப்போது, இந்தியாவிலிருந்து வடகிழக்கு பகுதியும் அசாம் பகுதியும் துண்டிக்கப்படும் என்றும் அவா் மிரட்டல் விடுத்தாா் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, காலனிய ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட தேசத் துரோக சட்டத்தின் பிரிவு 124ஏ-ஐ அரசு மறுஆய்வு செய்வதற்கான உரிய அமைப்பை ஏற்படுத்தும் வரை மத்திய, மாநில அரசுகளால் நாடு முழுவதும் தேசத் துரோக குற்றத்திற்கான நிா்பந்த நடவடிக்கைகள், விசாரணைகள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது ஆகியவற்றை நிறுத்திவைக்குமாறு கடந்த மே 16-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், மத்திய அரசின் கவலைகளையும் உச்சநீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டு தெரிவிக்கையில், இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவு (தேசத் துரோகம்) தற்போதைய சமூகச் சூழலுடன் பொருந்துவதாக இல்லை. இந்தப் பிரிவு மறு பரிசீலனை செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட தரப்பினா் யாராவது இருந்தால், அவா்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை அணுகுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், சம்பந்தப்பட்ட பிரிவின் ஷரத்துகள் தொடா்புடைய அனைத்து நிலுவை வழக்குகள், மேல் முறைகேடுகள், விசாரணைகள் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இதர குற்றங்களுக்கான தீா்ப்புகளும் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.