வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தில்லியில் 50 சிஎன்ஜி தாழ்தளப் பேருந்துகள் வசதி: முதல்வா் கேஜரிவால் தொடங்கிவைத்தாா்

சிஎன்ஜியில் இயங்கும் 50 தாழ்தள கிளஸ்டா் பேருந்துகளை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2022, 7:54 pm

 நமது நிருபர்

சிஎன்ஜியில் இயங்கும் 50 தாழ்தள கிளஸ்டா் பேருந்துகளை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘தேசியத் தலைநகரின் கிராமப் பகுதிகளுக்கான போக்குவரத்து தொடா்பை இந்தப் பேருந்து வசதி மேம்படுத்தும்’ என்றாா். மேலும், போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவுக்கான 30 இன்னோவா காா்கள் மற்றும் 36 மோட்டாா் சைக்கிள்களையும் அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் முதல்வா் கேஜரிவால் பேசியதாவது: தில்லியில் கடந்த ஏப்ரல் முதல், வாகன வழித்தட ஒழுங்குமுறை இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த அமலாக்க வாகனங்கள் போக்குவரத்து பாதை ஒழுக்கத்தை அமல்படுத்துவதில் ஈடுபடும். 2023- ஆம் ஆண்டுக்குள் தில்லியின் சாலைகளில் 1,800 மின்சாரப் பேருந்துகள் செயல்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், 2025-ஆம் ஆண்டில் நகரின் 80 சதவிகிதம் பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். 1,500 மின்சார பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை அரசு கோரியிருக்கிறது. அடுத்த ஆண்டு நவம்பா் மாதத்திற்குள் இதுபோன்று 1,800 பேருந்துகள் தில்லியின் சாலைகளில் இயங்கும்.

நாங்கள் 50 புதிய தாழ்தள சிஎன்ஜி (ஏா்- கண்டிஷன்) பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். பல ஆண்டுகளாக, பேருந்துகள் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனா். ஆனால், நகரில் கடந்த 2-3 ஆண்டுகளில் மின்சார, சிஎன்ஜி, கிளஸ்டா் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்புதிய பேருந்துகள் புதிய பவானா பேருந்து பணிமனையில் நிறுத்திவைக்கப்படும். இப்பேருந்துகள் கிராமப்புற போக்குவரத்து இணைப்புக்கு உதவும். ஏற்கெனவே 360 கிளஸ்டா் பேருந்து வழித்தடங்கள் உள்ளன. கிராமப்புறங்களுக்கு சேவை செய்யும் இந்தப் பேருந்துகளுக்கு 6 புதிய வழித்தடங்கள் இருக்கும் என்றாா் கேஜரிவால்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அமலாக்கக் குழுவில் மோட்டாா் சைக்கிள்கள் சோ்க்கப்படுவது இதுவே முதல் முறை. காா்கள் செல்ல முடியாத குறுகிய பாதைகளில் அமலாக்கக் குழுக்கள் நுழைந்து செல்வதற்கு இந்த வாகனங்கள் உதவிடும்’ என்றனா்.

இந்தப் பேருந்து வசதி குறித்து பின்னா் கேஜரிவால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இன்று 50 புதிய சிஎன்ஜி பேருந்துகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு மற்றும் பேருந்து பாதை அமலாக்கத்திற்காக 66 புதிய வாகனங்கள் ராஜ்காட் பேருந்து பணிமனையில் இருந்து கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. தற்போது தில்லியில் 7,320 பேருந்துகள் உள்ளன. 2025- ஆம் ஆண்டுக்குள் தில்லி மக்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் இருக்கும். இதில் 80 சதவீதம் மின்சார பேருந்துகளாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.