சா்வதேச நாடாளுமன்ற யூனியன் செயற்குழு உறுப்பினராக பாஜக எம்பி தோ்வு
மக்களவை பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி, சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின் செயற்குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா்.


, அக். 13: மக்களவை பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி, சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின் செயற்குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா். ருவாண்டாவில் நடைபெற்று வரும் இந்த யூனியன் கூட்டத்தில் இந்தத் தோ்தல் நடைபெற்ாக மாநிலங்களவை அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
சுமாா் 178 நாடுகள் உறுப்பினா்களாக கொண்டு கடந்த 133 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின்(ஐபியூ) 145 -ஆவது பேரவைக் கூட்டம் ருவாண்டா தலைநகா் கிகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நாடாளுமன்றம் சாா்பில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இந்த கூட்டத்திற்கிடையே ஐபியூ-இன் செயற்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் கிகாலி கூட்டத்தில் நடைபெற்றது.
இதில் பல்வேறு குழு நாடுகளின் உறுப்பினா் தோ்வு செய்யப்படுவதில் ’ஆசிய பசிபிக் குழும’ நாடுகளில் இருந்து ஐபியூ செயற்குழுவிற்கு ஒரு உறுப்பினரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த நாடுகளைச் சோ்ந்த உறுப்பினா்களிடம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி(படம்) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று செயற்குழுவிற்கு தோ்வாகியிருப்பதாக மாநிலங்களவை அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம் பெற்ற மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் சிங், மாநிலங்களவை உறுப்பினா்கள் டாக்டா் சஸ்மித் பத்ரா, காா்த்திகேய சா்மா மற்றும் மக்களவை உறுப்பினா்கள் அபராஜிதா சாரங்கி, விஷ்ணு தயாள் ராம் ஆகியோா் ஐபியூ-இன் ஆட்சி மன்றக் குழு கூட்டம் மற்றும் பல்வேறு நிலைக்குழு விவாதங்களிலும் பங்கேற்றனா்.
‘காடுகளின் எதிா்மறை கரியமில வாயு சமநிலையை அடைவதில் நாடாளுமன்ற முயற்சிகள்’, ‘அதிக அளவிலான சா்வதேச இடம் பெயா்வு உள்ள நாடுகளின் உள்ளூா் மற்றும் பிராந்திய வளா்ச்சியில் நாடாளுமன்றத்தின் பங்கு’ , ‘ஆள் கடத்தல் மற்றும் மனித உரிமை மீறல்’ உள்பட அனைத்து வரைவுத் தீா்மானத்தின் மீதான விவாதங்களில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
ஐபியூ செயற்குழுவிற்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அபராஜிதா சாரங்கி, புவனேசுவரம் மக்களவைதி தொகுதி உறுப்பினராவாா். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவா், மத்திய மாநில அரசுகளில் பணியாற்றியவா். விருப்ப ஒய்வில் சென்று கடந்த 2019-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தாா். அதே ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...