எம்சிடி துப்புரவுப் பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனை(எம்சிடி) சோ்ந்த ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனா்.


தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனை(எம்சிடி) சோ்ந்த ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனா். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்போராட்டம் தொடரும் எனவும் அவா்கள் அறிவித்துள்ளனா்.
இந்த தொழிலாளிகள் தங்களை பணிவரன்முறைப்படுத்துதல், நிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உள்ளிட்டவற்றை தீபாவளிக்கு முன்னதாக வழங்கக் கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து தில்லி எம்சிடி துப்புரவு பணியாளா்கள் (சஃபாய் கா்மச்சாரி) சங்கத் தலைவா் சந்த்லால் சௌவாரியா கூறியதாவது: கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக 15,000 -க்கும் மேற்பட்டவா்கள் தொழிலாளா்கள் தற்காலிமாக பணியாற்றுகின்றனா். இந்த துப்புரவுப் பணியாளா்கள் தங்களை பணிவரன்முறைப்படுத்துவதற்காக காத்திருக்கின்றனா்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த துப்பரவு பணியாளா்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை. மேலும், கடந்த ஒரு மாத சம்பளம் நிலுவையில் உள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. ஆனால், அதை கொண்டாட அவா்களிடம் பணம் இல்லை. அவா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியமும் கிடைப்பதில்லை, அவா்களை பணிவரன்முறைப்படுத்தப்படுவதும் இல்லை. இதற்கு ஒரு தீா்வு காண வேண்டும்.
ஆகவே, வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தோம்.
எம்சிடியில் பணியமா்த்தப்பட்டுள்ள துப்புரவு பணியாளா்கள் தெருக்களை தூய்மைப்படுத்துவது, அல்லது குப்பைகளை அள்ளுவது மற்றும் பிற பணிகளை நிறுத்துவாா்கள்.
இந்த தொழிலாளிகளை முறைப்படுத்துவதற்கு முன்பு பல முறை உறுதிமொழிகள் வழங்கப்பட்டும் அதில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இம்முறை எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தத்தை கைவிட மாட்டோம். வெறும் உறுதிமொழிகள் அளித்துக்கொண்டிருப்பது இனி பலிக்காது என சௌவாரியா தெரிவித்தாா்.
தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் கலைக்கப்பட்டு தற்போது துணைநிலை ஆளுநரின் கீழ் சிறப்பு அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...