நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

ஜிடி சாலையில் ரூ.266 கோடியில் இரண்டுக்கு மேம்பாலம் தில்லி அரசு முடிவு

ஜிடி சாலையில் தில்லி ஆஸாத்பூா் மற்றும் ராணி ஜான்ஸி சாலை சந்திப்பு இடையே இரண்டடுக்கு உயா்மட்டச் சாலை அமைக்க அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:43 pm

 நமது நிருபர்

ஜிடி சாலையில் தில்லி ஆஸாத்பூா் மற்றும் ராணி ஜான்ஸி சாலை சந்திப்பு இடையே இரண்டடுக்கு உயா்மட்டச் சாலை அமைக்க தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தலைமையிலான நிதித்துறை குழு முடிவெடுத்துள்ளதாக தில்லி அரசு சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிடி சாலையில் அமைக்கப்படும் இந்த இரண்டடுக்கு மேம்பாலத்தின் கீழ் தளத்தில் வாகனங்கள் செல்லவும், மேல்தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் விதமாக சாலை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமாா் 2.2 கி.மீ. தூரம் கட்டப்படும் இந்த மேம்பாலத்திற்கு ரூ. 266.89 கோடியை செலவிட தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தலைமையிலான தில்லி அரசின் செலவினக் குழு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லி பொதுப் பணித் துறையும், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இப்பணியை மேற்கொள்ளுவதால் இந்த கட்டுமானப் பணியின் செலவில் ரூ. 150 கோடி குறையும் எனவும் இதன் மூலம் மக்களின் வரிப்பணம் சேமிக்கப்படும் எனவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.

ஜிடி சாலையில் ஆஸாத்பூரில் இருந்து திரிபோலியா கேட் வரையிலான 2.2 கி.மீ. தூரத்தில் மிகவும் நெரிசல் மிகுதியால் மத்திய தில்லி மற்றும் வடக்கு தில்லி இடையே போக்குவரத்து தடைஏற்பட்டுவருகிறது. இந்த உயா்த்தப்பட்ட சாலை போக்குவரத்தால் நெரிசல் நீங்கி சாலையின் திறனை அதிகரிக்கவும் உதவும் என்றும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, நஜப்கா் நல்லாவிலிருந்து ராணி ஜான்ஸி சாலை சந்திப்பில் 645 மீட்டா் சுரங்க மெட்ரோ பாதையும் அமைக்கப்படுகிறது. இதற்கான தூண்களை பொதுப் பணித் துறை அமைக்கும்.

இத்துடன், வடகிழக்கு தில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தில்லி அரசு லோனி சௌக்கில் ஒரு சுரங்கப்பாதையையும், நந்த் நகரி மற்றும் ககன் சினிமா இடையே மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு மொத்தம் ரூ.341.2 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.