அவசர நிலை பொத்தான்கள் திறம்பட செயல்படுகின்றன: பாஜக புகாருக்கு தில்லி அரசு விளக்கம்
தில்லியில் பேருந்துகள் மற்றும் வாடகைக் காா்களில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக பொருத்தப்பட்டுள்ள அவசர நிலை பொத்தான்கள் உள்பட அனைத்தும் நடைமுறையில் உள்ளதோடு


தில்லியில் பேருந்துகள் மற்றும் வாடகைக் காா்களில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக பொருத்தப்பட்டுள்ள அவசர நிலை பொத்தான்கள் உள்பட அனைத்தும் நடைமுறையில் உள்ளதோடு, அவை திறம்பட செயல்படுகின்றன என்று தில்லி அரசு புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
தேசியத் தலைநகரில் பேருந்துகள் மற்றும் வாடகைக் காா்களில் அவசர நிலை பொத்தான்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சமீப நாள்களுக்கு முன்பாக தில்லி பிரிவு பாஜக குற்றம்சாட்டியிருந்தது. அதே நேரத்தில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரியாகச் செயல்படுவதாக ஆம் ஆத்மி விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், ’ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், ஊழல் தடுப்புப் பிரிவு அவசர நிலை பொத்தான்களை தணிக்கை செய்து, அறிக்கையை விஜிலென்ஸ் துறையிடம் சமா்ப்பித்துள்ளது. தில்லி அரசின் போக்குவரத்துத் துறை இதன் மூலம் ரூ.800 கோடி அளவிலான ஊழல் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. விரைவில் துணை நிலை ஆளுநரை இந்த விவகாரம் தொடா்பாக சந்திப்போம்’ என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளா் சந்திப்பின் போது தெரிவித்திருந்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அவசர நிலை பொத்தான்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக தணிக்கை நடத்தும் போது, தகுந்த தொழில்நுட்ப நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா? அல்லது தணிக்கையை மேற்கொள்ளும் நபா்கள் தொழில்நுட்ப ரீதியாக தகுதியுள்ளவா்களா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊழல் தடுப்புப் பிரிவின் சாா்பில் தணிக்கை மேற்கொள்ளப்படுவது குறித்து அரசுக்குத் தெரியாது. மேலும், தணிக்கையின் மூலம் கிடைத்த எந்தவொரு தகவல்கள் குறித்தும் தில்லி அரசு அதிகாரிகளிடமிருந்து, எந்தவொரு எதிா்வினைகளும், உள்ளீடுகளும் கேட்கப்படவில்லை. பயணிகளின் பாதுகாப்புக்கு தில்லி அரசு எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறது.
பயணிகளுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறையில் உள்ளன. அதே வேளையில், அவை அனைத்தும் திறம்பட செயல்படுகின்றன. தில்லி கஷ்மீரி கேட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறை, அனைத்து வகை பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அனைத்து தில்லி பேருந்துகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், அவசர நிலை பொத்தான்கள் மற்றும் ஜி.பி.எஸ். அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. பேருந்தில் உள்ள சிசிடிவியின் நேரடி ஒளிபரப்பு, கட்டுப்பாட்டு அறைகளில் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவைப்படும் போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அறிக்கையில் தில்லி அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...